கப்பலின் அழகிற்கே டஃப் கொடுக்கும் சொகுசு கார்.. உற்பத்தியே தொடங்கல அதுக்குள்ள காட்சிப்படுத்திய பென்ஸ்!
உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), இந்தியாவில் இக்யூஜி (EQG) எனும் கார் மாடலை காட்சிப்படுத்தி இருக்கின்றது. இது ஓர் கான்செப்ட் (Concept) மாடல் ஆகும். இந்த கார் இந்தியாவில் காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவில் இன்றைய (ஜனவரி 31) தினம் இரண்டு ஃபேஸ்லிஃப்ட் (Facelifts) சொகுசு கார் மாடல்களை பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஜிஎல்ஏ (GLA) மற்றும் ஜிஎல்இ 53 கூபே (GLE 53 Coupe) ஆகிய கார்களையே அது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இவற்றை அறிமுகம் செய்து வைத்த அதே மேடையில் வைத்தே இந்த கான்செப்ட் இக்யூஜி மாடலையும் பென்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியது. பென்ஸ் நிறுவனத்தின் இந்த செயல் அந்நிறுவன கார் காதலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. விரைவில் இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை எடுத்துரைக்கும் வகையிலேயே இந்த வெளியீட்டு சம்பவம் அமைந்திருக்கின்றது.
இதனாலேயே பென்ஸ் கார் காதலர்கள் இந்த கார் காட்சிப்படுத்தலால் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். அதேவேளையில், இந்த காரை முதன் முதலில் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஃப்ராங்க்ஃப்ர்ட் மோட்டார் ஷோ (Frankfurt Motor Show)-விலேயே பென்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இந்தியர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக தற்போது இந்தியாவில் அந்த கார் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலாக ஜி-வேகன் இருக்கின்றது. இந்த கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்டதே இந்த கான்செப்ட் இக்யூஜி ஆகும். வெகுவிரைவில் இந்த கார் மாடலின் உற்பத்தி வெர்ஷனையும் இந்தியாவில் பென்ஸ் வெளியீடு செய்ய இருக்கின்றது. இதற்கு தொடக்க புள்ளியாகவே கான்செப்ட் இக்யூஜி காட்சிப்படுத்தல் அமைந்திருக்கின்றது.
இப்போது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் கான்செப்ட் இக்யூஜி-யில் லேசான மாற்றங்களை மட்டுமே செய்து அதை பென்ஸ் உற்பத்திக்கு அனுப்ப இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தற்போது உள்ள அதே பெட்டி போன்ற அமைப்பிலேயே உற்பத்திக்கான இக்யூஜி இருக்கும் என தெரிகின்றது. அதேவேளையில், காற்றை கிழித்துக் கொண்டு செல்வதற்கு ஏதுவான ஏரோடைனமிக் தோற்றமும் இந்த காருக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இது காரின் ரேஞ்ஜ் திறனை சீர்நிலையில் வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கும். மேலும், குறைந்த புவி ஈர்ப்பு மையத்தை இந்த காரில் உறுதி செய்வதற்காக காரின் லேடர் ஃப்ரேம் சேஸிஸில் பேட்டரி பேக் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இது அனைத்து வீல் இயக்கம் கொண்ட மின்சார காராகவே விற்பனைக்கு வர இருக்கின்றது.
மேலும், இந்த கார் வெறும் 4.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனைக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இதுதவிர இதற்கு ஆஃப்-ரோடுகளை சமாளிக்கும் வசதியும் வழங்கப்பட இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் தற்போது விற்பனையில் ஜி-வேகனையே செயல்திறன், சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்களில் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இக்யூஜி உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

சமீப காலமாக வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களும் இதையே கூறுகின்றன. ஆனால், இக்யூஜி சொகுசு எஸ்யூவி எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கிய அம்சங்கள் எதையும் இன்னும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. வெகு விரைவில் இதுபற்றிய தகவலை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்காரர்கள் மத்தியில் டீசல் சொகுசு கார்களுக்கு பதிலாக தற்போது எலெக்ட்ரிக் சொகுசு கார்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுவதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழல் இந்தியாவில் இருப்பதை உணர்ந்தே முன்னணி லக்சூரி கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புகளை வரிசைக் கட்டி விற்பனைக்கு களமிறக்கிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications









