மாருதி ஓரமா நில்லு.. லி.22 கிமீ மைலேஜ் தரும் காரை அறிமுகம் செய்த எம்ஜி.. லுக்கிலும் செம்ம கவர்ச்சியா இருக்கு

மைலேஜை வாரி வழங்குவதில் கில்லாடிகளாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்த காரணத்தினால்தான் இந்தியர்கள் பலர் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை ஈ போல் மொய்த்துக் கொண்டிருக்கின்றனர். பிராண்டின் சில கார் மாடல்கள் பாதுகாப்பு விஷயத்தில் பூஜ்ஜியம் ஸ்டாரைப் பெற்றிருக்கின்றன என்பது தெரிந்தபோதிலும், அதுபற்றி துளியும் கவலையின்றி இந்தியர்கள் பலர் இந்த பிராண்ட் காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழலே உலக அளவில் நிலவுகின்றது. ஆமாங்க, இந்தியர்கள் மட்டுமல்ல உலக அளவில் உள்ள மக்கள் பலரும் விரும்பக் கூடியதாக மைலேஜ் இருக்கின்றது. இதை அறிந்தே சில வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் கவனத்தை அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களின் பக்கம் திருப்பி இருக்கின்றனர்.

Mg 3 hybrid hatchback

அந்தவகையில், உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி (MG)-யும் அதிகம் மைலேஜ் தரும் கார்களை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நிறுவனம் தற்போது ஓர் தரமான கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. எம்ஜி3 (MG3) கார் மாடலே அது ஆகும்.

இதன் புதிய தலைமுறை வெர்ஷனையே எம்ஜி நிறுவனம் தற்போது வெளியீடு செய்து இருக்கின்றது. 2024 ஜெனிவா மோட்டார் ஷோ (2024 Geneva Motor Show) வாயிலாகவே இந்த காரை அது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த கார் ஏற்கனவே உலக சந்தை சிலவற்றில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Mg 3 hybrid hatchback display

தற்போது வெளியீடு செய்திருப்பது மூன்றாம் தலைமுறை வெர்ஷன் ஆகும். புதிய தலைமுறையின் வாயிலாக பல்வேறு சிறப்பு வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் இந்த காரில் சேர்த்திருக்கின்றது எம்ஜி நிறுவனம். ஆகையால், இன்னும் பலமடங்கு அதிக சிறப்புகள் கொண்ட பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார் மாடலாக இது மாறி இருக்கின்றது.

ஷாங்காய் ஸ்டுடியோவில் வைத்தே இந்த கார் எம்ஜி புதிய தலைமுறையாக அப்கிரேட் செய்திருக்கின்றது. குறிப்பாக, மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் மற்றும் கச்சிதமான ஏரோடைனமிக் அமைப்பு ஆகியவற்றையும் அது வழங்கி இருக்கின்றது. இதுதவிர, யாரும் எதிர்பார்த்திராத சிறப்பம்சங்கள் சிலவற்றையும் அது வழங்கி இருக்கின்றது.

Mg 3 hybrid hatchback seat

அந்தவகையில் வழங்கப்பட்டதே அடாஸ் எனப்படும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில், அடாஸ் அம்சத்தின் வாயிலாக லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வார்டு கொலிசன் அலர்ட், டிராஃபிக் ஜாம் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதேபோல், நிறுவனம் வழங்கி இருக்கும் ஹைபிரிட் பிளஸ் அம்சத்தின் வாயிலாக அதிக மைலேஜை பெற்றுக் கொள்ள முடியும். எம்ஜி 3 ஹைபிரிட் பிளஸ் தொழில்நுட்பம் கொண்ட எம்ஜி 3 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.72 கிமீ வரையில் மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

Mg 3 hybrid hatchback interior design

அதேவேளையில், ப்யூர் எலெக்ட்ரிக் மோடில் பயணிக்கும்போது இந்த காரில் 80.4 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. இந்த ரேஞ்ஜ் திறனுக்காக நிறுவனம் எலெக்ட்ரிக் காரில் 1.83 kWh பேட்டரி பேக்கை வழங்கி இருக்கின்றது. எனவே எரிபொருள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் காராக இது உள்ளது.

1.5 லிட்டர் 4 சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடனேயே எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இரண்டும் இணைந்து 234.74 பிஎச்பி மற்றும் 378 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 170 கிமீ ஆகும்.

Mg 3 hybrid hatchback rear

அதேவேளையில், இதனால் வெறும் 8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை அதனால் எட்டிவிட முடியும் என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது. இத்தகைய சூப்பரான திறன் கொண்ட குட்டியான சிறிய வகை ஹேட்ச்பேக் காரையே எம்ஜி வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரின் இந்திய வருகை உறுதிச் செய்யப்படவில்லை.

இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் கார்களுக்கு நல்ல வரவேற்பு நிலவுகின்றது. ஆகையால் இந்த காரை எம்ஜி நிறுவனம் விரைவிலோ அல்லது வரும் நாட்களிலோ அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்த நிறுவனம் இந்தியாவில் கால்தடம் பதித்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த பிராண்டு தற்போது இந்தியாவில் ஹெக்டர், அஸ்டர், குளோஸ்டர், இசட்எஸ் இவி மற்றும் கோமெட் இவி ஆகிய கார் மாடல்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் இன்னும் சில கார் மாடல்களையும் எம்ஜி நிறுவனம் இணைக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதில், கோமெட் இவி-யே இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே கோமெட் இவி-யை போல மிகவும் அழகான மற்றும் குட்டியான கார் மாடலான எம்ஜி3 மாடலின் மூன்றாம் தலைமுறையை உலக புகழ்பெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது எம்ஜி.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குட்டியான மற்றும் அதிகம் மைலேஜ் தரும் கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் எஸ்-பிரஸ்ஸோ போன்ற கார் மாடல்கள் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே எம்ஜி அதன் மூன்றாம் தலைமுறை எம்ஜி3 கார் மாடல் வெளியீடு செய்திருக்கின்றது. இது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் எனில் மிகப் பெரிய சந்தையை அந்த பிராண்டிற்கு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 28, 2024, 19:50 [IST]
English summary
Mg 3 hybrid hatchback unveiled in 2024 geneva motor show
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X