மாருதி, ஹூண்டாய்க்கு செக் வைக்க போகும் எம்ஜி! இந்த கார் புது அவதாரத்தில் வரப்போகுதா! எகிறும் எதிர்பார்ப்பு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி அஸ்டர் (MG Astor). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக எம்ஜி அஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றிய ஒரு சில முக்கிய தகவல்கள் தற்போது வெளியே கசிந்துள்ளன.
இதன்படி எம்ஜி அஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன் பகுதியில் ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் பக்க பம்பர் கொடுக்கப்படலாம். அத்துடன் புதிய ஹெட்லேம்ப்களும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பின் பகுதியை பொறுத்தவரையில் டெயில்லைட்களின் ஒட்டுமொத்த வடிவம் தக்க வைக்கப்பட்டாலும், ஒரு சில மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். மேலும் முன் பகுதியை போல் பின் பகுதியிலும் பம்பர்கள் ரீ-டிசைன் செய்யப்படலாம். இதுதவிர ஒருங்கிணைந்த ஸ்டாப் லேம்ப் உடன் ரூஃப் ஸ்பாயிலரும் கொடுக்கப்படலாம். மேலும் பின் பகுதியில் வைப்பரையும் நாம் எதிர்பார்க்கலாம். இவை எல்லாம் தவிர, புதிய அலாய் வீல்களும் கொடுக்கப்படலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில், தற்போது விற்பனையில் உள்ள மாடலில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகியவை ஆகும். இதில், 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 108 பிஹெச்பி பவர் மற்றும் 144 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.
இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது, அதிகபட்சமாக 138 பிஹெச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எம்ஜி அஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ ஆப்ஷன்கள் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால், தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான், புதிய மாடலிலும் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் எம்ஜி அஸ்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது என நாம் உறுதியாக நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி அஸ்டர் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதுதவிர கியா செல்டோஸ் (Kia Seltos), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களுக்கும், எம்ஜி அஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் விற்பனையில் மிக கடுமையான சவாலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எம்ஜி நிறுவனம் அஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மட்டுமல்லாது, எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Gloster Facelift) மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








