சொல்லி வெச்ச மாதிரி எல்லாரும் வாங்க போற எலக்ட்ரிக் கார் - எம்ஜிக்கு திருப்பு முனையாக அமையுமா?

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதற்கு தொடர்ந்து முனைப்புடன் உள்ளது. அந்த வகையில், புதியதாக எம்ஜி க்ளவுட் இவி என்கிற எலக்ட்ரிக் கார் அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், எம்ஜி க்ளவுட் இவி டெல்லிக்கு அருகே நெடுஞ்சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்ட போது எங்களது கண்ணில் பட்டது. அப்போது நாங்கள் காட்சிப்படுத்திய வீடியோவையும், இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியா உள்பட உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, எம்ஜி மோட்டார் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. நம் நாட்டு சந்தையில் எம்ஜி மோட்டாரில் இருந்து ஏற்கனவே இசட்.எஸ் இவி மற்றும் கோமெட் இவி என இரு எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

mg cloud ev electric car

இதில் கோமெட் இவி ஆனது இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் காராக விளங்குகிறது. இந்த நிலையில், க்ளவுட் இவி என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் தயாராகி வருகிறது. இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் எம்ஜி க்ளவுட் இவி எலக்ட்ரிக் கார் இந்தியாவில் சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

வுல்லிங் க்ளவுட் இவி என்கிற பெயரில் ஏற்கனவே ஒரு எலக்ட்ரிக் கார் சில வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது. அந்த எலக்ட்ரிக் கார் தான் இந்தியாவில் எம்ஜி க்ளவுட் இவி என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எம்ஜி கோமெட் இவி காரும் இதே பாணியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் காரே ஆகும்.

mg cloud ev electric car

தற்போது, எம்ஜி க்ளவுட் இவி எலக்ட்ரிக் கார் டெல்லி- ஜெய்பூர் நெடுஞ்சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின்போது, கார் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இருப்பினும், காரின் வடிவம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து நமக்கு ஒரு ஐடியா கிடைக்கிறது. குறிப்பாக, க்ளவுட் இவி காரின் முன்பக்கம் ஆனது எம்ஜி கோமெட் இவி காரை போன்று உள்ளது.

ஆனால், கோமெட் இவி காரை விட க்ளவுட் இவி அளவில் பெரியதாகும். க்ளவுட் இவி எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் முழு அகலத்திற்கு எல்இடி லைட் பார் வழங்கப்படலாம். ஹெட்லைட்கள் இரண்டாக பிளவுப்பட்ட டிசைனில் கிடைக்கும். பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான பகுதி க்ளவுட் இவி காரில் முன்பக்கத்தில் வழங்கப்படுகிறது. கதவு கைப்பிடிகள் பறித்து இழுக்கக்கூடியதாக இருக்கும்.

mg cloud ev electric car

முன்பக்கத்தை போன்று, பின்பக்கத்தில் முழு அகலத்திற்கு டெயில்லைட்கள் இந்த எலக்ட்ரிக் காரில் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் 5-ஸ்போக் அலாய் சக்கரங்களுடன் வுல்லிங் க்ளவுட் இவி கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலும் அதே மாதிரியான அலாய் சக்கரங்களுடன் தான் இந்த கார் விற்பனை செய்யப்படும் என்றாலும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை ஓட்டத்தில் காரின் சக்கரங்கள் கூட மறைப்புகளால் மறைக்கப்பட்டு உள்ளது.

தற்போது நமது டிரைவ்ஸ்பார்க் குழு காட்சிப்படுத்தியுள்ள வீடியோவில், க்ளவுட் இவி காரின் உட்புறத்தை காண முடியவில்லை. முழுவதுமாக மடக்கக்கூடிய முன் இருக்கைகள் உடன் வுல்லிங் இவி கார் விற்பனை செய்யப்படுகிறது. க்ளவுட் இவி எலக்ட்ரிக் காரில் 50.6kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்படலாம். வுல்லிங் நிறுவனத்தின் இந்த பேட்டரி ஆனது முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 460கிமீ தொலைவிற்கு காரை இயக்கக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி கோமெட் இவி காரை போன்று முன்பக்கத்தை கொண்டிருக்கும் புதிய எம்ஜி க்ளவுட் இவி காரை விலை குறைவானதாக எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அந்த அளவிற்கு நன்கு நீளமானதாக க்ளவுட் இவி உருவாக்கப்படுகிறது. க்ளவுட் இவி எலக்ட்ரிக் கார் உடன் டெல்லி- ஜெய்பூர் நெடுஞ்சாலையில் 2025 க்ளோஸ்டர் காரையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஓட்டி பார்த்து சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 4, 2024, 21:28 [IST]
English summary
Mg cloud ev electric car spotted while road testing check all details here
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X