இந்தியாவே தவம் கிடக்கும் எலெக்ட்ரிக் கார் இவ்ளோ சீக்கிரமா வர போகுதா! இப்பவே ஷோரூம்ல சொல்லி வைக்கணும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக குறுகிய காலத்தில் வேகமாக பிரபலமடைந்த நிறுவனங்களில் ஒன்று எம்ஜி மோட்டார் (MG Motor). இந்நிறுவனம் தற்போதைய நிலையில் மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அவை எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகியவை ஆகும். இந்த வரிசையில் மூன்றாவதாக ஒரு எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் தயாராகி வருகிறது.

அது எம்ஜி க்ளவுட் இவி (MG Cloud EV) ஆகும். இந்த கார் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு கொண்டுள்ளது. இந்த சூழலில், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் கார், வரும் செப்டம்பர் 2வது வாரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MG Cloud EV

எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் காரில், 50.6kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 460 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. எனவே தொலைதூர பயணங்களுக்கும் ஏற்ற டிரைவிங் ரேஞ்ச்-ஆக இது இருக்கும்.

வசதிகளை பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ், சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்றவை மிக முக்கியமான அம்சங்களாக இருக்கும் என கருதப்படுகிறது. இதுதவிர இந்த காரின் உள்ளே ட்யூயல் ஸ்க்ரீன் செட்-அப் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

MG Cloud EV Interior

இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். இந்திய சந்தையில் பிஒய்டி இ6 (BYD e6) காருக்கு நேரடி போட்டியாக எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் கார் களமிறக்கப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பிரீமியமான எலெக்ட்ரிக் காராக இருக்கும். அனேகமாக 25-28 லட்ச ரூபாய் என்ற விலையில் எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரானது 6.99-9.40 லட்ச ரூபாய் என்ற விலையிலும், எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரானது 18.98-25.20 லட்ச ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

இந்த 2 எலெக்ட்ரிக் கார்களையும் விட, எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் விலை அதிகமாக இருக்கலாம் என்பது எங்களுடைய கருத்து. பிரீமியமான ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் கார் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 16, 2024, 22:47 [IST]
English summary
Mg cloud ev india launch september second week all details here
மேலும்... #mg motor #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+