ஒரு டைம் சார்ஜ் பண்ணா சென்னைல இருந்து மதுரை போயரலாம்! இந்த எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG Motor). தற்போதைய நிலையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இங்கு 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகியவை ஆகும்.

இந்த வரிசையில் இந்திய சந்தையில் தனது 3வது எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் தயாராகி வருவதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது எம்ஜி க்ளவுட் இவி (MG Cloud EV) எலெக்ட்ரிக் காராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் சமீப நாட்களாக எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இந்திய சந்தையில் எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் காருக்கான காப்புரிமையை எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது பெற்றுள்ளது.

MG ZS EV

இது எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற யூகத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவை 50.6 kWh மற்றும் 37.9 kWh பேட்டரிகள் ஆகும். இதில், 50.6 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 460 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். அதே நேரத்தில் 37.9 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 360 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MG Cloud EV

வசதிகளை பொறுத்தவரையில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பின் பகுதியில் ஏசி வெண்ட்கள், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகியவை, எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் காரின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இவை எல்லாம் தவிர, பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இதன் ஆரம்ப விலை 25 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்ஜி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது இந்திய சந்தையில் தற்போது எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து வரும் 2 எலெக்ட்ரிக் கார்களை காட்டிலும் விலை உயர்ந்ததாக இருக்கலாம். தற்போதைய நிலையில் இங்கு எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 6.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.40 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. மறுபக்கம் எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 18.98 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 25.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆனால் எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே 25 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவேதான் அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. இந்த வரிசையில் வரவுள்ள எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் கார், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறலாம் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, May 13, 2024, 23:58 [IST]
English summary
Mg cloud ev patented in india all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+