எஸ்யூவி காரையே உருவத்தில் தூக்கி சாப்பிடும் கார்.. சைஸை பாத்த ரெண்டு குடும்பம்கூட ஒன்னா போகலாம் போலையே!

மிக மிக பெரிய உருவம் கொண்ட கார் ஒன்று இந்திய சாலையில் முழு மறைப்புகளுடன் வலம் வரும் வீடியோ வெளியாகி கார் ஆர்வலர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, அது எம்ஜி நிறுவனம், விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் ஓர் புதுமுக வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் அதனை இன்டலிஜென்ட் சியூவி (Intelligent CUV) எனும் குறிப்பெயரிலேயே குறிப்பிட்டு வருகின்றது. இது ஓர் சியூவி (கிராஸோவர் யுடிலிட்டி வாகனம்) ரக காராகும் ஆகும்.

இந்த காரையே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அவ்வாகனம் தற்போது தீவிர சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கார் இந்தியாவில் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.

MG cloud ev spied

இதற்கு முன்னதாகவும் இந்த வாகனம் கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி செடான், ஹேட்ச்பேக், எம்பிவி மற்றும் எஸ்யூவி உள்ளிட்ட கார் மாடல்களே விற்பனையில் இருக்கின்றன. சியூவி கார் பிரிவில் ஒரு கார் மாடல்கூட விற்பனையில் இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியிலேயே எம்ஜி தற்போது களமிறங்கி இருக்கின்றது.

சீக்கிரமே சோதனையோட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த வாகனம் விரைவிலேயே விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக எம்ஜி நிறுவனம் இந்த காரின் சோதனையோட்டத்தை தற்போது தீவிரப்படுத்தி இருக்கின்றது. இந்த கார் எஸ்யூவி ரக காரைக் காட்டிலும் மிகப் பெரிய உருவம் கொண்டதாக இருக்கும்.

MG cloud ev side view

இதை உறுதிப்படுத்தும் விதமாக 4.3 மீ முதல் 4.5 மீ வரையிலான அளவைக் கொண்டதாக இந்த கார் இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த சோதனை மாடல் முழுமையாக ஸ்டிக்கரால் மறைக்கப்பட்டு இருந்ததால் அதன் சிறப்புகள் பற்றிய எந்த விபரத்தையும் முழுமையாக தெரிவிக்க முடியவில்லை.

அதேவேளையில், சிறிய பான்னட் மற்றும் பெரிய முகப்பு கண்ணாடியை அது கொண்டிருப்பதை நம்மால் அறிய முடிகின்றது. இந்த அமைப்பு எம்பிவி (MPV) உடன் ஒத்துப்போகும் வகையில் அமைந்திருக்கின்றது. தொடர்ந்து, மிக அதிக தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. அந்தவகையில், 8.8 அங்குல டிஜிட்டல் டிரைவர் திரை, ஒரு பெரிய ஃப்ரீ ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

தொடர்ந்து, பெரிய பனோரமிக் சன்ரூஃப், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், காற்றோட்டமான முன் இருக்கைகள், பவர்டு டெயில்கேட் மற்றும் டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இந்த சியூவி காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த காரின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி இந்த கார் கிளவுட் இவி எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. இது ஓர் மின்சார கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. உலக சந்தையில் இந்த கார் எக்ஸலர் இவி எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரையே இந்தியர்களுக்கு ஏற்றபடி மாற்றி எம்ஜி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இந்த காரில் 177 பிஎஸ் மற்றும் 280 என்எம் டார்க் ஆற்றலை உற்பத்தி செய்யும் ஒற்றை மின்சார மோட்டாருடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பேட்டரி பேக்கை பொருத்த வரை 50.3 kWh பேட்டரி பேக்கே எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் முழு சார்ஜில் 450 கிமீ ரேஞ்ஜ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சியூவி ரக வாகனங்கள் பயணிகள் பயணிப்பதற்கு மட்டுமல்ல அதிக அளவில் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு உகந்த வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. பொதுவாக, பின் பக்கத்தில் எஸ்யூவி காரைக் காட்டிலும் அதிக லக்கேஜை ஏற்றிச் செல்ல முடியும். எனவே, வரும் நாட்களில் எஸ்யூவி ரக கார்களுக்கு இந்த சியூவி ரக கார் மிகப் பெரிய போட்டியாளனாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 11, 2024, 16:32 [IST]
English summary
Mg cloud ev spy shots hint at premium features and advanced technology
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+