இந்தியாவின் முதல் சியூவி ரக காரின் டீசர் படத்தை முதல்முறையாக வெளியிட்ட எம்ஜி.. செப்டம்பருல தூள் கிளப்ப போகுது!

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் இந்தியாவில் விரைவில் ஓர் புதுமுக கார் மாடலை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. புதுமுக காரின் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் தற்போது அந்த காரின் டீசர் படங்களை எம்ஜி வெளியீடு செய்திருக்கின்றது. அந்தவகையில், புதுமுக காரில் இடம் பெற இருக்கும் எல்இடி லைட், எம்ஜி எம்பளம், சன்ரூஃப், ஸ்டியரிங் வீல் மற்றும் அலாய் வீல் ஆகியவற்றின் டீசர் படங்களே எம்ஜி வெளியிட்டிருக்கின்றது. சமீபத்தில் எம்ஜி நிறுவனம் ஓர் காரை இந்திய சாலைகளில் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தியது.

அது மறைப்புகளுடனேயே சோதனையோட்டம் செய்யப்பட்டது. இந்த காரே விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாகவும், அதன் டீசர் படங்களே தற்போது வெளியிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த புதுமுக கார் கிளவுட் இவி (Cloud EV) எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

MG coud ev teased

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை அலங்ரிக்கும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. இதுதவிர கிளவுட் இவி என்பது சியூவி CUV) ரக கார் மாடல் என்றும் கூறப்படுகின்றது.

எஸ்யூவி காரைவிட சற்று பெரிய உருவம் கொண்டதாகவே இந்த சியூவி ரக கார் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் பயணிகளுக்கு மட்டுமின்றி, சரக்குகளை அதிகம் ஏற்றிச் செல்வதற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவின் சியூவி ரக கார் பிரிவில் விற்பனைக்கு வர இருக்கும் முதல் கார் மாடலும் இதுவே ஆகும்.

MG coud ev roof

எனவே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் அதிகரித்துக் காணப்படுகின்றது. மேலும், இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் நிறுவனத்தின் இந்தியாவிற்கான மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் இருக்கும். ஏற்கனவே எம்ஜி நிறுவனத்தின்கீழ் இசட்எஸ் இவி மற்றும் கோமெட் இவி என்கிற இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலேயே மூன்றாவதாக கிளவுட் இவி விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இது பலதரப்பட்ட பிரீமியம் அம்சங்கள் நிறைந்த வாகனமாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது வெளியாகி இருக்கும் டீசர் படங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், பெரிய சன்ரூஃப் மற்றும் கவர்ச்சியான அலாய் வீல் ஆகியவை இதில் இடம் பெற இருப்பதை டீசர் படங்கள் உறுதி செய்திருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, ஆம்பியன்ட் லைட், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் முன் பக்க இருக்கை, மியூசிக் சிஸ்டம் மற்றும் பெரிய திரைகள் உள்ளிட்டவையும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இப்போதைக்கு இந்த எலெக்ட்ரிக் கார் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இப்போது வரை வெளியிடப்படவில்லை. செப்டம்பர் அறிமுகத்தை முன்னிட்டு வெகு விரைவில் இந்த கார் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளையில், இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் எம்ஜி நிறுவனம் இந்த காரில் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷனை வழங்க இருப்பதாக தெரிவிக்கின்றன. 50.6 kWh மற்றும் 37.9 kWh ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்களே வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதில் முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 460 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது பேட்டரி பேக் தேர்வு ஓர் முழு சார்ஜில் 360கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி போன்ற முன்னணி நிறுவனங்களின் இடத்தை பிடிக்கும் முயற்சியில் எம்ஜி நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் நிறுவனம் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஓர் கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த நிலையிலேயே கிளவுட் இவியை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் அது தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, July 26, 2024, 19:13 [IST]
English summary
Mg cloud ev teased ahead of india launch features panoramic sunroof
மேலும்... #mg motor #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+