பேரே பயங்கரமா இருக்கு... எல்லாரும் நெனச்சத விட குறைவான விலையில் வரும் எலெக்ட்ரிக் கார்... டாடாவுக்கு செக்...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று எம்ஜி க்ளவுட் இவி (MG Cloud EV). இது இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் களமிறக்கவுள்ள 3வது எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். முன்னதாக எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) என மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் மூன்றாவதாக வரவுள்ள எம்ஜி க்ளவுட் இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் எம்ஜி க்ளவுட் இவி என்ற பெயரில்தான், இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் மூலம், இந்த எலெக்ட்ரிக் கார் இந்த பெயரில் விற்பனைக்கு வராது என தெரிகிறது. அதற்கு பதிலாக எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம்.

MG Cloud EV

ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் இந்த எலெக்ட்ரிக் காரின் அதிகாரப்பூர்வமான பெயரை வரும் ஆகஸ்ட் 5ம் தேதி அறிவிக்கவுள்ளது.

இது ஏற்கனவே வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு கொண்டுள்ள ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். வெளிநாடுகளில் இந்த எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 வகையான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 37.9 kWh மற்றும் 50.6 kWh ஆகிய பேட்டரி ஆப்ஷன்கள் ஆகும்.

MG Cloud EV To Be Christened Windsor In India

இதில், 37.9 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 360 கிலோ மீட்டர்கள் எனவும், 50.6 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 460 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் எந்த பேட்டரி ஆப்ஷன் பொருத்தப்பட்ட மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்திய சந்தையில் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை 20 லட்சத்திற்கு உள்ளாக மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி (Mahindra XUV400 EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக, இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி நிறுவனத்தின் இந்த புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார், ஆரம்பத்தில் 25 லட்ச ரூபாய் என்ற விலையில் வரலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது 20 லட்ச ரூபாய்க்குள்ளான விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் கார் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், எம்ஜி நிறுவனம் 20 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையை நிர்ணயம் செய்தால், இந்த எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கை சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 1, 2024, 15:51 [IST]
English summary
Mg cloud ev to be christened windsor in india full details here
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+