பாத்த உடனே வாங்கணும்னு தோணுது... விலை எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே ஷோரூமுக்கு கௌம்பீருவீங்க...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி மோட்டார் (MG Motor). இங்கிலாந்தை சேர்ந்த இந்த நிறுவனம் கடந்த 1924ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது எம்ஜி மோட்டார் நிறுவனம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்து விட்டன.
இதை எம்ஜி மோட்டார் நிறுவனம் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக எம்ஜி ஹெக்டர் (MG Hector), எம்ஜி அஸ்டர் (MG Astor), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகிய கார்களில், 100வது வருட லிமிடெட் எடிசன் (100 Year Limited Edition) மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வழக்கமான மாடல்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்களில் நிறைய மாற்றங்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் செய்து அசத்தியுள்ளது.

இந்த சூழலில், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் 100வது வருட லிமிடெட் எடிசன் மாடல்கள் தற்போது இந்தியா முழுவதும் உள்ள ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ளன. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 100வது வருட லிமிடெட் எடிசன் மாடல்கள், புத்தம் புதிய எவர்க்ரீன் என்ற கலர் ஆப்ஷனை பெற்றுள்ளன.
இதற்கு எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் 100வது வருட லிமிடெட் எடிசன் மாடலும் விதிவிலக்கு அல்ல. எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்க்ளூசிவ் எஃப்சி (Exclusive FC) வேரியண்ட்டின் அடிப்படையில், 100வது வருட லிமிடெட் எடிசன் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 9.40 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 55 கனெக்டட் கார் வசதிகள், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் டிஜிட்டல் கீ என்று ஏகப்பட்ட வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, இதிலும் அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை என கூற முடியும்.
செயல்திறனை பொறுத்தவரையில் இந்த எலெக்ட்ரிக் காரில் 17.3 kWh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் (Range) 230 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், பயணம் செய்யக்கூடிய தொலைவுதான் ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் 100வது வருட லிமிடெட் எடிசன் மாடலின் வருகை, டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா பன்ச் இவி (Tata Punch EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் ஒரு சிறிய எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு எம்ஜி கோமெட் இவி மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும். இது குறைவான விலையில் கிடைக்க கூடிய எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று என்பது இதன் கூடுதல் பலம்.


Click it and Unblock the Notifications








