இந்த எலக்ட்ரிக் கார்களை விலையை பார்த்து எடை போடக் கூடாது... 60% செலவை மிச்சப்படுத்தலாம்!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புத்தம் புதிய விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் காரை சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் நிறைய அம்சங்கள் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது BaaS (Battery as a Service) எனப்படும் பேட்டரியை வாடகைக்கு விடும் திட்டமாகும். கஸ்டமர்கள் மத்தியில் கவனத்தை பெறுமா? இல்லையா? என்பதே தெரியாத பேட்டரி வாடகை திட்டத்தை மேலும் இரு எலக்ட்ரிக் கார்களுக்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது விரிவுப்படுத்தி உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு இன்னமும் சில பேர் யோசிப்பதற்கு அவற்றின் விலையையும் ஒரு காரணமாக சொல்லலாம். அதேநேரம் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கும் தற்போதைக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் ஒரு காரணமே. ஃபாஸ்ட் இவி சார்ஜிங் நிலையங்கள் தற்போதைக்கு முக்கிய மாநகரங்களில் மட்டுமே உள்ளன.

mg electric cars with baas

நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிற்கும் இவி சார்ஜிங் நிலையங்கள் செல்ல வேண்டும் என்றால் அதற்கு இன்னும் பல வருடங்களாகும். இதனை, சமையல் எரிவாயு சிலிண்டர் யுக்தியில் சரி செய்யலாம் என ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். அதாவது, சிலிண்டர் காலியாகினால் பழையதை கொடுத்து கேஸ் நிரப்பப்பட்ட புதிய ஒன்றை வாங்கிக் கொள்கிறோம். அதேபோன்று, எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளையும் மாற்றிக் கொள்ளலாம்.

ஃபாஸ்ட் இவி சார்ஜிங்கை போன்று, இவ்வாறு பேட்டரியை வாடகைக்கு பெறும் வணிகமும் தற்போதைக்கு இந்தியாவில் ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளது. இந்த வணிகத்தை தற்போது பெரியதாக ஊக்கப்படுத்தி இருக்கும் நிறுவனம் எம்ஜி மோட்டார் ஆகும். பேட்டரி சார்ஜ்க்கான கட்டணத்தை பெறும் தொழிலில் ஏற்கனவே சிறு, சிறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன.

mg electric cars with baas

ஆனால், எம்ஜி மோட்டாரின் நுழைவிற்கு பிறகு இந்த வணிகம் களைக்கட்ட துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி வாடகை திட்டத்துடன் சமீபத்தில் எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதனை தொடர்ந்து எம்ஜி கோமெட் இவி மற்றும் இசட்.எஸ் இவி என்கிற இரு எம்ஜி எலக்ட்ரிக் கார்களில் புதியதாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை பார்த்தால், மாருதி எர்டிகா போன்று நன்கு பெரியதாக உள்ளது. இருப்பினும், காரின் ஆரம்ப விலை வெறும் ரூ.9.99 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், காரின் பேட்டரிக்கான கட்டணம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதேபோன்று, BaaS திட்டத்துடன் விற்பனை செய்யப்பட உள்ள எம்ஜி கோமெட் இவி மற்றும் எம்ஜி இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் கார்களின் விலைகளும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

mg electric cars with baas

எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.4.99 லட்சமாகவும், எம்ஜி இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ.13.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. BaaS திட்டத்தின்படி, சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை பெறும்போது அதற்கான கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். ஆனால், முன்பு பயன்படுத்திய பேட்டரியில் எத்தனை கிமீ-க்கு காரை ஓட்டினீர்களோ அதற்கு கிமீ-க்கு இவ்வளவு ரூபாய் என கொடுக்க வேண்டும்.

எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காருக்கு ஒரு கிமீ-க்கு ரூ.3.5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், எம்ஜி கோமெட் இவி-க்கு கிமீ-க்கு ரூ.2.5-யும், எம்ஜி இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் காருக்கு கிமீ-க்கு ரூ.4.5-யும் கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். இவ்வாறு வாங்கப்படும் தங்களது எலக்ட்ரிக் கார்களுக்கு 3 வருடத்திற்கு பிறகு நிச்சயமாக 60% மதிப்பை பெறலாம் என எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி வேகமாக நகர முயற்சித்து வருகிறது. அதற்கு எம்ஜி மோட்டார் போன்ற நிறுவனங்களின் இவ்வாறான திட்டங்கள் உந்துதலாக இருக்கும். இருப்பினும், Baas திட்டம் பலனளிக்குமா என்பது பெரிய கேள்வியே. இந்த விஷயத்தில் எம்ஜி மோட்டார் பெரிய சவாலை கையில் எடுத்துள்ளது. சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2024, 18:38 [IST]
English summary
Mg comet ev and zs ev introduced with baas rental program check price here
மேலும்... #mg motor #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X