பைக் வாங்கற காசுல இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கீடலாம்... கற்பனைக்கு எட்டாத அளவுக்கு விலையை கொறச்சுட்டாங்க...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி கோமெட் இவி (MG Comet EV). இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். பேஷ் (Pace), ப்ளே (Play) மற்றும் ப்ளஸ் (Plus) என மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், ஆரம்ப நிலை பேஷ் வேரியண்ட்டின் விலை (Price) தற்போது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இந்த வேரியண்ட்டின் விலை 1 லட்ச ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனி எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் பேஷ் வேரியண்ட்டை வெறும் 6.99 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே வாங்க முடியும்.

இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் மற்ற 2 வேரியண்ட்களின் விலை எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது? என்பது அறிவிக்கப்படவில்லை. எம்ஜி மோட்டார் நிறுவனம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக இந்த அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், 17.3 kWh பேட்டரி (Battery) தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய எலெக்ட்ரிக் காருக்கு இந்த டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) சிறப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது.

எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை. இதில், 10.25 இன்ச் அளவுடைய 2 திரைகள் மிகவும் முக்கியமானது ஆகும். இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக செயல்படும். மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும்.
இதுதவிர வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கீலெஸ் எண்ட்ரி மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகளையும் இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. சிறிய கார் என்பதால், பாதுகாப்பு வசதிகளுக்கு போதுமான அளவில் இருக்காது என நினைக்க வேண்டாம். எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த விஷயத்திலும் குறை வைக்கவில்லை.
ஏனெனில் முன் பகுதியில் 2 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் கேமரா மற்றும் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ் மற்றும் இபிடி என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் (Safety Features), எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இது கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் அளவில் சிறியது என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். குறைவான விலையில் ஒரு சிறப்பான எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷன் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








