இப்படியாப்பட்ட காரை கம்மி விலையில் கொண்டு வர போறாங்களா! எம்ஜி சைபர்ஸ்டர் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியானது!
இந்தியாவின் சூப்பர் கார் (Super Car) மார்க்கெட்டை அலங்கரிக்கும் விதமாக எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் சைபர்ஸ்டர் (Cyberster) கார் மாடல் சீக்கிரமே விற்பனைக்கு வர இருக்கின்றது. இது மின்சாரத்தில் இயங்கும் சூப்பர் கார் (Electric Sports Car) மாடல் ஆகும். இப்போது விற்பனையில் இருக்கும் மற்ற சூப்பர் கார் மாடல்களைக் காட்டிலும் குறைவான விலையில் இந்த காரை விற்பனைக்கு வர எம்ஜி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடைவதற்குள் இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே சைபர்ஸ்டர் கார் பற்றிய முக்கிய விபரங்கள் சிலவற்றை எம்ஜி நிறுவனம் தற்போது வெளியிட்டு உள்ளது. இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலேயே முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இரட்டை எலெக்ட்ரிக் மோட்டார்களைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக சைபர்ஸ்டர் விற்பனைக்கு வர இருப்பது தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களினால் உறுதியாகி இருக்கின்றது.

ஒவ்வொரு ஆக்சிஸிலும் ஓர் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும். இது 510 பிஎஸ் மற்றும் 725 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன் இந்த காரில் மிகவும் மெல்லிய வகை பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருப்பதும் தற்போது உறுதியாகி இருக்கின்றது.
அந்த பேட்டரி பேக் 110 மிமீ அளவைக் கொண்டதாக இருக்கும் என்றே கூறப்படுகின்றது. மேலும் பேட்டரி பேக்கைப் பொருத்த வரை 77 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே சைபர்ஸ்டர் காரில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதுதவிர, இன்னும் சில பேட்டரி பேக் தேர்வுகளும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
மேலும், ஓர் முழு சார்ஜில் 350 கிமீ முதல் 500 கிமீ வரையில் இந்த கார் ரேஞ்ச் தரும் எனவும் கூறப்படுகின்றது. இதேபோல், இதன் வேக திறன் மணிக்கு 200 கிமீ இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, வெறும் 3.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை சைபர்ஸ்டர் எட்டிவிடும்.
சைபர்ஸ்டர், ஓர் இரண்டு டோர்கள் மற்றும் இரண்டு இருக்கைகளை மட்டுமே கொண்ட கன்வெர்டபிள் கார் மாடல் ஆகும். இந்த காரை ஜனவரியில் எம்ஜி நிறுவனம் வெளியீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னதாக அதே ஜனவரி மாதத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த வாகனம் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.
இதற்கு பின்னரே இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த காரை எம்ஜி நிறுவனம் தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற கன்வெர்டபிள் சூப்பர் கார்களைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
80 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய்க்கும் குறைவான விலையிலேயே இந்த கார் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் விலைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவிலேயே அதன் விலைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாம் யூகித்து இருப்பதைக் காட்டிலும் குறைவான விலையிலும் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதன் எலெக்ட்ரிக் காரை பிரிவை வலுப்படுத்தும் முயற்சியில் எம்ஜி களமிறங்கி இருக்கின்றது. வழக்கமான மின்சார கார் மாடல்களுடன் சேர்த்து சைபர்ஸ்டர் போன்ற தனித்துவமான திறன் கொண்ட வாகனங்களையும் அது நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








