சென்னையே ஸ்தம்பிச்சு போயிருச்சு! ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரியா! விலைய கேட்டதும் ஷோரூம்ல கூட்டம் குவியுது
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள கார் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV). கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 3,116 எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது அக்டோபர் மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு மொத்த எலெக்ட்ரிக் கார்களில், 30 சதவீதம் ஆகும். இதன் மூலம் அக்டோபர் மாத விற்பனையில், டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காரை பின்னுக்கு தள்ளி, இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையையும், எம்ஜி விண்ட்சர் இவி பெற்றுள்ளது.
எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை எக்ஸைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் ஆகியவை ஆகும். இதில், ஆரம்ப நிலை வேரியண்ட் விலை வெறும் 13.50 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட் விலை 15.50 லட்ச ரூபாய் மட்டுமே.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் இதை காட்டிலும் குறைவான விலையில் கூட எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரை உங்களால் வாங்கி கொள்ள முடியும். இதற்கு நீங்கள் ஆசைப்பட்டால், BaaS (Battery-as-a-Service) திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ், எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரை வாங்கினால், ஆரம்ப நிலை வேரியண்ட் விலை வெறும் 9.99 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் டாப் வேரியண்ட் விலையோ வெறும் 11.99 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் இந்த திட்டத்தை தேர்வு செய்தால், எவ்வளவு தூரம் ஓட்டுகிறீர்களோ, அதற்கு பணம் செலுத்த வேண்டும்.

இதன்படி ஒரு கிலோ மீட்டர் ஓட்டுவதற்கு 3.50 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த திட்டத்தை தேர்வு செய்தாலும் கூட, அது நீங்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. இதன் காரணமாகவே எம்ஜி விண்ட்சர் இவி, இந்தியாவின் நம்பர்-1 எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸானிடம் இருந்து தட்டி பறித்துள்ளது.
எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரில், 38kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 332 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த டிரைவிங் ரேஞ்ச் (Driving Range), இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அத்துடன் 15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் பனரோமிக் க்ளாஸ் ரூஃப் என எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரில், ஏகப்பட்ட அதிநவீன வசதிகளும் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.
இது போன்ற காரணங்களால், எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரை வாங்க, வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டுள்ளனர். இதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் (Chennai) நேற்று (நவம்பர் 16) ஒரே நாளில், 101 எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார்கள், வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. இதன் காரணமாக வரும் மாதங்களில், எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார், விற்பனையில் பல்வேறு சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








