பெட்ரோல், டீசல் கார்களின் கதையை முடிக்க களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்கள்... விலை இவ்ளோதானா...

இந்திய சந்தையில் மிகவும் குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி மோட்டார்ஸ் (MG Motors). தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த வரிசையில் மேலும் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், ஒன்று எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்ததாகவும், மற்றொன்று எலெக்ட்ரிக் எம்பிவி (Electric MPV) ரகத்தை சேர்ந்ததாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

Baojun Yep Plus

எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடியதற்கு ஏற்றவையாக இந்த எலெக்ட்ரிக் கார்கள் இருக்கும். எனினும் இந்த எலெக்ட்ரிக் கார்களின் விலை 15 லட்ச ரூபாய்க்கு உள்ளேதான் இருக்கும் என தெரிகிறது. இதில், எலெக்ட்ரிக் எம்பிவி கார்தான் முதலில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக இந்த எலெக்ட்ரிக் எம்பிவி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக இந்த எலெக்ட்ரிக் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இன்னும் ஓராண்டு காலத்திற்கு உள்ளாக இந்த எலெக்ட்ரிக் எம்பிவி கார் விற்பனைக்கு வந்து விடும் என நாம் எதிர்பார்க்கலாம்.

Baojun Yep Plus Rear Design

இதை தொடர்ந்து எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் என கருதப்படுகிறது. எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களில் அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது. இதன்படி இந்த 2 எலெக்ட்ரிக் கார்களிலும் பல்வேறு அதிநவீன வசதிகளை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

ஆனால் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. வரும் மாதங்களில் இந்த தகவல்களும் வெளியாகும் என நாம் நம்பலாம். வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் எஸ்யூவி அல்லது எலெக்ட்ரிக் எம்பிவி கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் இந்த தகவல்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணியில் உள்ளது. ஆனால் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விலை 15 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என்பது, எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. இதன் மூலம் பெட்ரோல், டீசல் கார்களை வாங்கி கொண்டுள்ள பலரின் கவனமும் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, March 21, 2024, 21:57 [IST]
English summary
Mg electric suv mpv india launch details out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+