எம்ஜியின் அடுத்த எலெக்ட்ரிக் காரின் பெயர் இது தானா? பெயருக்காகவே சேல்ஸ் பிச்சுக்கப்போகுது!
எம்ஜி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை புதிதாக களம் இறக்கப் போவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த காருக்கான பெயராக எக்ஸிலர் இவி என்ற பெயரை அந்நிறுவனம் டிரேடு மார்க் செய்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த எக்ஸிலர் இவி கார் குறித்த விரிவான அனைத்து தகவல்களையும் காணலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் இந்தியாவில் காலடித்தடத்தை எடுத்து வைத்து தரமான கார்களை களம் இறக்கியதால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற நிறுவனமாக மாறியது. இன்றளவும் மக்கள் எம்ஜி நிறுவனத்தின் கார்கள் என்றால் தரமான கார்களாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கார்களை வாங்கி வருகின்றனர். இதனால் இந்தியர்கள் மத்தியில் எம்ஜி நிறுவனத்திற்கு என ஒரு நல்ல பெயர் உள்ளது.

இந்நிலையில் எம்ஜி நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் காராக கோமெட் இவி என்ற குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் மார்க்கெட்டில் சிறப்பான விற்பனையில் இருந்து வருகிறது. குறைவான பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் காரை வாங்க விரும்புபவர்களுக்கு கோமெட் இவி ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கிறது. தற்போது எம்ஜி நிறுவனம் அந்த காருக்கு சலுகைகளும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது அடுத்த எலெக்ட்ரிக் காரை களம் இறக்க தயாராகி வருகிறது. எம்ஜி நிறுவனம் சர்வதேச பிராண்டில் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்கள் எல்லாம் எம்ஜி நிறுவனத்தின் முதன்மை நிறுவனமான எஸ்ஏஐசி என்ற சீனாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கார்கள் தான் எம்ஜி பேட்ஜில் சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையாகி வருகின்றன.

இந்த கார்கள் எல்லாம் மெல்ல இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது புதிய காருக்கான பெயரை பதிவு செய்யும் விதமாக டிரேடு மார்க் ஒன்றை பதிவு செய்துள்ளது. இதன்படி எக்ஸிலர் இவி என்ற பெயரில் இந்த டிரேட் மார்க் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த காரை சர்வதேச மார்க்கெட்டில் எம்ஜி நிறுவனத்தின் பிராண்டில் உள்ள இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள டாடா நெக்ஸான் இவி மற்றும் மாருதி எக்ஸ்யூவி 400 ப்ரோ ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் சர்வதேச அளவில் தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான கார்களை எல்லாம் காட்சிப்படுத்தி இருந்தது. இதன்படி இஎம்ஜி6 ஹைபிரிட் செடான் கார் எம்ஜி இ ஹெச்எஸ்எஸ் 5 எஸ்யூவி, மார்வெல் இ ஆகிய கார்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எம்ஜி நிறுவனம் இந்த எக்ஸிலர் இவி காருக்கு எந்த காரை சர்வதேச மார்க்கெட்டில் இருந்து கொண்டு வரப் போகிறது என்ற தெளிவான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் எஸ்யூவி ரக கார் என்பது என்ற தகவல் மட்டும் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால் எம்ஜி நிறுவனம் அந்த ரக கார்களையே இந்தியாவில் கொண்டு வரும்.
எம்ஜி நிறுவனம் இந்த 2024-ம் ஆண்டு மொத்தம் இரண்டு கார்களை அறிமுகப்படுத்த தற்போது திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் எஸ்யூவி காரான குளோஸ்ட்டர் காரின் ஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷன் காரை ஒரு காராகவும் மற்றொரு கார் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குளோஸ்டர் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அப்டேட் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் அதிக கவனங்களை செலுத்தி வருகின்றன. அதன்படி எம்ஜி நிறுவனமும் புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களை தங்கள் அணிவகுப்பில் சேர்க்க இது ஒரு முயற்சியாக எடுத்துள்ளது. நிச்சயம் இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications









