டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சங்கு ஊதப்போகும் புதிய கார்... வெளியான தகவலால் உற்சாகத்தில் இந்திய வாடிக்கையாளர்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster). இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி (Full-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஜீப் மெரிடியன் (Jeep Meridian) மற்றும் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) உள்ளிட்ட கார்களுடன், எம்ஜி க்ளோஸ்டர் போட்டியிட்டு வருகிறது.

இந்த கார்களுக்கு எல்லாம் கூடிய விரைவில் போட்டி இன்னும் கடுமையாக போகிறது. எம்ஜி நிறுவனம் க்ளோஸ்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதுதான் இதற்கு காரணம். எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

MG Gloster

அதற்கு முன்னதாக உருவம் மறைக்கப்பட்ட நிலையில், எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது கேமரா கண்களில் சிக்கும் இதன் ஸ்பை படங்கள் மூலமாக எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் நமக்கு கிடைத்து வருகின்றன.

இதன்படி தற்போது ஒரு சில தகவல்கள் தெரியவந்துள்ளது. அவற்றை இந்த செய்தியின் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்த புதிய மாடலின் முன் பகுதியில் புதிய ஹெட்லைட்கள், புதிய க்ரில் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பம்பர் ஆகியவை வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்படலாம்.

MG Gloster SUV

பின் பகுதியை பொறுத்தவரையில் ரீ-டிசைன் செய்யப்பட்ட டெயில்கேட் மற்றும் பம்பரை நாம் எதிர்பார்க்கலாம். இதுதவிர புதிய எல்இடி டெயில்லைட்களும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பொதுவாக எம்ஜி நிறுவனத்தின் கார்களில் அதிநவீன வசதிகளுக்கு (Features) பஞ்சமிருக்காது. எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.

தற்போதைய மாடலில் வழங்கப்படும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) தொகுப்பு ஆகியவை ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு புதிய வசதிகளையும் நாம் எதிர்பார்க்க முடியும்.

செயல்திறனை பொறுத்தவரையில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine) கொடுக்கப்படலாம். சிங்கிள் டர்போ மற்றும் ட்வின் டர்போ என 2 வடிவங்களில் இந்த இன்ஜின் வழங்கப்படலாம். இதனுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன் வழங்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி க்ளோஸ்டர் காரின் ஆரம்ப விலை 37.50 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 43 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப் மாடலின் டிசைனில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதன் காரணமாகவும், புதிய வசதிகள் வழங்கப்படுவதாலும், விலை சற்று அதிகமாக இருக்கலாம். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் இந்த காரின் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 28, 2024, 17:34 [IST]
English summary
Mg gloster facelift new details of toyota fortuner rival out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+