திருடன்தானே போர்வை போத்திகிட்டு ஊருக்குள்ள வருவான்.. இந்த சீன காரு ஏன் இப்படி வலம் வந்திருக்கு?
சீன நிறுவனத்திற்கு சொந்தமான இங்கிலாந்து நாட்டு கார் உற்பத்தி நிறுவனம் எம்ஜி (MG). இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் குளோஸ்டர் (Gloster)-ம் ஒன்றாகும். இது ஓர் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.
இதற்கு, இதன் போட்டி கார் மாடலுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் விற்பனை வரவேற்பு சற்று குறைவாகவே இருக்கின்றது. இந்த நிலை காரணமாக சீன நிறுவனம் குளோஸ்டர் எஸ்யூவி-யை புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது. இந்த காரின் சோதனையோட்டத்தையே எம்ஜி தற்போது தொடங்கி இருக்கின்றது.

விரைவில் புதிய குளோஸ்டர் விற்பனைக்கு இருப்பதை முன்னிட்டே அந்த காரை தீவிர சாலை பலபரீட்சையில் ஈடுபடுத்த ஆரம்பித்து இருக்கின்றது எம்ஜி. இந்த சோதனையோட்டத்தின் போதே கேமிராவின் கண்களில் அக்கார் சிக்கி இருக்கின்றது. என்ன மாதிரியான புதுப்பித்தல்கள் குளோஸ்டரில் செய்யப்பட்டு இருக்கின்றன என்பதை முன்கூட்டியே வெளிக்காட்டக் கூடாது என்பதற்காக அந்த காரை முழுமையாக மறைப்புகளைக் கொண்டு மூடி சோதனையோட்டத்திற்கு உட்படுத்தி இருக்கின்றனர்.
முழுமையாக மறைக்கப்பட்டு இருப்பதன் விளைவாக எங்களால் அந்த காரில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. என்னென்ன புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய தகவல்களை துள்ளியமாக வழங்க முடியவில்லை. அதேவேளையில், கணிசமான மாற்றத்தை இந்த காரில் எம்ஜி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பம்பர் மற்றும் கிரில் போன்றவற்றில் மாற்றங்கள் மிகப் பெரியதாக இருக்கும் என கூறப்படுகின்றது. இதேபோல், புதிய எஞ்சினும் எம்ஜி குளோஸ்டரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புதிய எஞ்சினுடன் சேர்த்து ஹைபிரிட் டெக்னாலஜியையும் இந்த காரில் எம்ஜி வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல், இதன் உட்பக்கத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே எம்ஜி குளோஸ்டர் சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இதனை மேலும் சிறப்பிக்கும் விதமாக இந்த பெரிய திரை அக்காரில் வழங்கப்பட இருக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்கள் ஃபஸ்லிஃப்ட் குளோஸ்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன. அவை பற்றிய விபரங்கள் வரும் நாட்களில் வெளியாக உள்ளன. இந்த ஃபேஸ்லிஃப்ட் எம்ஜி குளோஸ்டர் ந்த ஆண்டு இரண்டாம் அரையாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. ரூ. 48 லட்சம் தொடங்கி ரூ. 55 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இப்போதைய நிலவரப்படி இந்திய சந்தையில் 38 லட்சத்து 79 ஆயிரத்து 800 ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து குளோஸ்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல் என ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்த காரில் எம்ஜி வழங்கி இருக்கின்றது.
இத்துடன், அடாஸ் (ADAS) அம்சமும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. புதிதாக விற்பனைக்கு வரவிருக்கும் குளோஸ்டரில் இதுபோன்று இன்னும் பல பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர அட்வான்ஸ்டு கார் இணைப்பு அம்சம் மற்றும் மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கக் கூடிய ரைடிங் மோட்களும் புதிய குளோஸ்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் காருக்கு தற்போது கணிசமான அளவிலேயே வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை என்பதே உண்மை. இதனை மாற்றியமைக்கும் பொருட்டே எம்ஜி நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் குளோஸ்டரை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









