இந்த காரை பார்த்தா ஃபார்ச்சூனரை எல்லாம் மறந்துடுவீங்க! இப்ப புதுசா 2 வெர்ஷன் வந்திருக்குது!

எம்ஜி நிறுவனம் தனது குளோஸ்டர் காரின் இரண்டு புதிய வெர்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டெசர்ட்ஸ்டோம் மற்றும் ஸ்னோஸ்டோம் ஆகிய இரண்டு புதிய வெர்ஷன் கார்கள் அறிமுகமாகியுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கும் நிலையில், இந்நிறுவனத்தின் சிறந்த எஸ்யூவி காரான குளோஸ்டர் காரின் இரண்டு புதிய வெர்ஷன்கள் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய அப்டேட்டில் அப்படி என்னென்ன விஷயங்கள் புதிதாக இருக்கிறது. இதன் விலை என்ன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இன்று தனது குளோஸ்டர் காரின் இரண்டு வெர்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி டெசர்ட்ஸ்டோம் முதல் ஸ்னோஸ்டோம் ஆகிய வெர்ஷன்கள் அறிமுகமாகியுள்ளன. இதில் புதிய கலர் ஆப்ஷன்கள், வெளிப்புற டிசைன் மற்றும் உட்புற தீம் மாற்றம் உள்ளிட்ட ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரை அதன் ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

mg gloster new launch

தற்போது எம்ஜி குளோஸ்டர் கார் ரூபாய் 38.80 லட்சம் விலையில் விற்பனையாகி வருகிறது.எம்ஜி குளோஸ்டர் டெசர்ட்ஸ்டோம் மற்றும் ஸ்னோஸ்டோம்ஆகிய இரண்டு புதிய வெர்ஷன் காரர்களும் ரூ.41 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் தான் நிறுவனத்தின் ப்ளாக்ஷிப் எஸ்யூவி காராக விற்பனையாகி வருகிறது.

இதற்கு முன்னர் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் இந்த எம்ஜி குளோஸ்டர் காரின் பிளாக்ஸ்டோம் வெர்ஷன் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தற்போது டெசர்ட்ஸ்டோம் மற்றும் ஸ்னோ ஸ்டோம் ஆகிய கார்கள் அறிமுகமாகியுள்ளன. எம்ஜி குளோஸ்டர் டெசர்ட்ஸ்டோம் காரைப் பொறுத்தவரை டீப் கோல்டன் ஷேடில் இதன் வெளிப்புற கலர் வழங்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கருப்பு நிற ஹைலைட்களும் வழங்கப்பட்டுள்ளன.

mg gloster new launch

இந்த காரின் முன்புறம் கருப்பு நிற கிரில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக கருப்பு நிற அலாய், சிவப்பு நிற பிரேக் கேலிபர்கள், கருப்பு நிறத்தில் ஓஆர்விஎம், லேசாக மாற்றி அமைக்கப்பட்ட ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் உட்புறம் கருப்பு நிற தீமில் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஸ்டீரிங் வீல் மற்றும் சீட்டுகள் எல்லாம் டார்க் தீமில் வழங்கப்பட்டுள்ளது.

எம்ஜி குளோஸ்டர் ஸ்னோஸ்டோம் காரை பொருத்தவரை இந்த காரின் உட்புறம் கருப்பு நிற சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் வெள்ளை நிற நூல்களை வைத்து தையல் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்புறம் இரண்டு நிற நிற ஷேடுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களை கொண்டு இந்த காரின் வெளிப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பக்க பம்பரில் சிவப்பு நிற ஆக்ஸென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க கிரில் அலாய் வீல்கள் மற்றும் பின்பக்க ஸ்பாய்லர்கள் எல்லாம் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

mg gloster new launch

எம்ஜி நிறுவனம் இந்த கார்களுக்கு டீலர் மூலம் பிட்டிங் செய்யப்படும் அக்ஸசரீஸ் சர்வீஸ்களின் பட்டியல்களையும் வழங்கி உள்ளது. அதன்படி சீட்டு மசாஜ்கள், தீம் கார்பெட், டேஷ் போர்டு கார்பெட், ஜேபிஎல் ஸ்பீக்கர் மற்றும் பேட்ஜ்கள் வழங்கப்படுகின்றன. இதை தேவைப்படும் வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜி நிறுவனம் இந்த குளோஸ்டர் காரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் மார்க்கெட்டில் நேரடியாக டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு போட்டியாக களம்பிறங்குகிறது. இதுபோக ஸ்கோடா கோடியாக், மற்றும் ஜீப் மெரிடியன் ஆகிய கார்களுக்கும் இந்த கார் கடும் போட்டியை தருகிறது.

இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை 2.0லிட்டர் 4சிலிண்டர் டீசல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் நேரடியாக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சமே சாலையில் இந்த கார் செல்லும்போது பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் இதன் வடிவமைப்பு தான். இந்த காரில் அடாஸ் தொழிற்நுட்பம் மற்றும் 30 பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி நிறுவனம் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு பைசா கூட செலவில்லாத சர்வீஸ் மற்றும் ரிப்பேர் உறுதியை வழங்குகிறது. இந்த கார் வாங்கியது முதல் 45,000 கிலோ மீட்டர் வரை இதை பராமரிப்பதற்காக எந்த செலவு செய்ய வேண்டியது இல்லை. இந்த வாரண்டியை 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வரை நீட்டிப்பதற்கும் ஆப்ஷனை வழங்குகிறது. குறிப்பிட்ட சில மாடல்களுக்கு பைபேக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனத்தின் இந்த குளோஸ்டர் கார் மக்கள் பலரை இயக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை பெரும் பணக்காரர்கள் வாங்க ஆசைப்படுகிறார்கள். முக்கியமாக அரசியல் தலைவர்கள் பெரிய பெரிய தொழில் அதிபர்கள் எல்லாம் இந்த காரை வாங்கி வருகிறார்கள். மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு நல்ல போட்டியை தரும் வகையில் இந்த கார் அறிமுகமாகி விற்பனையாகி வருகிறது. இதன் புதிய வெர்ஷனும் ஹிட்டாக வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 4, 2024, 17:59 [IST]
English summary
Mg gloster new launch desertstorm snowstorm series know full details
மேலும்... #MG Gloster 2024 #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X