போச்சு போங்க இனி இந்த கார வாங்கின மாதிரிதான்.. மனசாட்சியே இல்லாம இப்படி செய்வாங்கனு யாருமே எதிர்பார்க்கல!
சீன நிறுவனத்தின் கை வசம் உள்ள இங்கிலாந்து நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி (MG) இந்தியாவில் அதன் முக்கியமான கார் மாடல்கள் இரண்டின் விலையை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹெக்டர் (Hector) மற்றும் ஹெக்டர் பிளஸ் (Hector Plus) இந்த இரண்டு கார் மாடல்களின் விலையையே எம்ஜி தற்போது உயர்த்தி இருக்கின்றது. இந்த கார் மாடல்களின் எந்தெந்த தேர்வுகளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது? அதாவது, விலை உயர்த்தப்பட்டு உள்ளது? மற்றும் அந்த கார்களின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
நிறுவனத்தின் மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக காராக ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் இருக்கின்றது. இந்த இரண்டின் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது அதன் பிரியர்கள் மத்தயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ரூ. 16 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரையில் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது.

குறிப்பாக, ஹெக்டரின் பெட்ரோல் தேர்வுகளின் விலையில் ரூ.16 ஆயிரம் தொடங்கி ரூ. 22 ஆயிரமும், டீசல் தேர்வுளுக்கு ரூ.18 ஆயிரம் தொடங்கி 22 ஆயிரம் ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேவேளையில், இதன் ஆரம்ப நிலை தேர்வின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
ஸ்டைல் 1.5 பெட்ரோல் மேனுவல் தேர்வு அதே ரூ. 13.99 லட்சம் என்கிற விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், 2.0 டீசல் மேனுவல் மற்றும் ஸ்மார்ட் ப்ரோ 2.0 டீசல் மேனுவல் ஆகியவற்றின் விலைகளும் உயர்த்தப்படவில்லை.
இந்த மூன்று தேர்வுகளை தவிர மற்ற அனைத்து தேர்வுகளின் விலையையும் எம்ஜி உயர்த்தி இருக்கின்றது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிளாக்ஸ்டார்ம் எடிசனின் விலையையும் அது உயர்த்தி இருக்கின்றது. இதுவே அதிகபட்ச விலை உயர்வான ரூ. 22 ஆயிரத்தைப் பெற்றிருக்கின்றது. இதைத்தொடர்ந்து ஷார்ப் ப்ரோ 2.0 டீசல் மேனுவல் தேர்வின் விலையும் உச்சப்பட்ச விலை உயர்வான ரூ. 22 ஆயிரத்தைப் பெற்றிருக்கின்றது.
அதேவேளையில், எம்ஜி ஹெக்டர் பிளஸ் மாடலின் அனைத்து வேரியண்டுகளின் விலைகளிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 30 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆரம்ப நிலை தேர்வின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் விலையில் ரூ. 20 ஆயிரம் உயர்வு செய்யப்பட்டு இருப்பதால் அதன் ஆரம்ப விலை ரூ. 18 லட்சத்தில் இருந்து ரூ. 18.20 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்ச விலையைப் பெற்றிருப்பது ஸ்டைல் 6 சீட்டர் / 7 சீட்டர் 2.0 டீசல் மேனுவல்தான். இதன் விலையே ரூ. 30 லட்சம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆகையால், முன்னதாக ரூ. 17 லட்சத்திற்கு விற்கப்பட்ட இந்த தேர்வு தற்போது ரூ. 17.30 லட்சத்திற்கு விற்கப்படும் நிலை உருவாகி இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. விலை உயர்விற்கான காரணம் என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அதேவேளையில், எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக, அதே ஸ்டைல் மற்றும் எஞ்சின்களுடனேயே இந்த கார்கள் தொடர்கின்றன. 143 எச்பி திறன் கொண்ட 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 170 எச்பி ஆற்றலை வெளியேற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. இதேபோல், டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக பெட்ரோல் மோட்டாருடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடியும், டீசல் உடன் 6 ஸ்பீடு மேனுவல் ஆகியவை வழங்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சற்று குறைவான வரவேற்பேக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக ஹெக்டரே இருக்கின்றது. இதன் விலையையே எம்ஜி உயர்த்தி இருக்கின்றது. இதனால் இந்த காரின் விற்பனையில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








