ரோட்டுல எவ்வளவு கார் போனாலும் இந்த கார் துண்டா தெரியும்! விலை எவ்வளவு தெரியுமா?

எம்ஜி நிறுவனம் தனது ஹெக்டேர் காரின் பிளாக்ஸ்டோம் எடிசனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. முழுமையாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் நீண்ட எதிர்பார்ப்புகள் மத்தியில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் விலை விபரங்கள் என்ன மற்ற காருக்கும் இந்த காருக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காணலாம் வாருங்கள்.

எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டேர் கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற காராக இருக்கிறது. இந்த காரில் அவ்வப்போது சில அப்டேட்களை வெளியிட்டு அதன் விற்பனையை தக்க வைத்து எம்ஜி நிறுவனம் சிறப்பான விற்பனையை ஒவ்வொரு மாதமும் பெற்று வருகிறது. அதன்படி தற்போது இந்த காரின் பிளாக் ஸ்டோம் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது.

mg hector blackstorm

எம்ஜி ஹெக்டர் பிளாக் ஸ்டோம் காரை பொறுத்தவரை அதன் வெளிப்புறத்தில் ஸ்டேரி பிளாக் ஷேடு நிற தீம் வழங்கப்பட்டுள்ளது. காரின் உட்பகுதியில் கன் மெட்டல் ஆக்ஸிடென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரை பொறுத்தவரை 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆகிய இரண்டு வெர்ஷங்களும் விற்பனைக்கு வருகிறது.

இந்த காரின் முன் பகுதியில் உள்ள எம்ஜி லோகோ , கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் எம்ஜி நிறுவனத்தின் தனித்துவமான டைமண்ட் மெஷ் கிரில் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு நிறத்தில் சைடு பாடி மற்றும் கிளாடிங் ஃபினிஷ் எல்லாம் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

mg hector blackstorm

இந்த காரின் பக்கவாட்டில் 18 இன்ச் கொண்ட கருப்பு நிற அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. அதில் சிவப்பு நிற பிரேக் கேலிபர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இதுபோக இந்த காரில் உள்ளே ரூஃப் ரெயில்கள் எல்லாம் பியானோ பிளாக் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் எல்இடி ஹெட்லைட் பியானோ பிளாக் பேசல் நிறத்தில் ஸ்மோக் செய்யப்பட்ட லைட்டுக்களாக உள்ளன.

இந்த காரின் பின்பகுதியில் ஸ்மோக் கனெக்டெட் எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை வாங்குபவர்கள் பிளாக் ஸ்டோம் எம்பளமை டீலர்ஷிப்புகளின் உதவியுடன் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். டீலர்ஷிப்பில் இருந்தே அந்த எம்பளம் பாதிக்கப்பட்டு டெலிவரிக்கு அனுப்பப்படும். இந்த காரின் உட்பகுதியிலும் கருப்பு நிற தீம் வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, சென்டர் கண்சோல் ஆகிய இடங்களில் கன் மெட்டல் ஆக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

mg hector blackstorm

மேலும் இந்த காரில் உள்ள முக்கிய அம்சங்களாக 14 இன்ச் கொண்ட எச்டி டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது. இதுபோக பானரோமிக் சன் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. காரின் உட்புறம் உள்ள சீட்டு எல்லாம் முற்றிலும் கருப்பு நிற லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளாக் ஸ்டோன் எம்பளம் சீட்டுகளில் உள்ள ஹெட் ரெஸ்ட்களில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் ஸ்டியரிங்வீல் லெதர் கொண்டு மூடப்பட்டுள்ளது. இது கன்மெட்டல் ஃபினிஷில் இருக்கிறது. இந்த எம்ஜி ஹெட்டர் பிளாக்ஸ்டோம் எடிஷன் கார் 17.78சென்டிமீட்டர் அளவில் எல்சிடி ஸ்கிரீன் உடனும் வருகிறது. இதில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், ஸ்மார்ட்கீ , டிஜிட்டல் ப்ளூடூத் கேப்பபிலிட்டி, 75 கனெக்டெட் அம்சங்கள், 100 வாய்ஸ் கமெண்டுகள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் கொண்ட காராக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

mg hector blackstorm

இந்த கார் மூன்று ஆண்டுகள் வாரன்டியுடன் விற்பனைக்கு வருகிறது. கிலோமீட்டர் குறித்த எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. மூன்று ஆண்டுகள் எவ்வளவு கிலோமீட்டர் ஓடினாலும் அவ்வளவு கிலோமீட்டருக்கும் வாரண்டி வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் ரோடு சைடு அசிஸ்டென்ஸ் லேபர் ஊதியம் இல்லாத இலவச சர்வீஸ் ஆகியன இந்த காருக்கு கிடைக்கிறது.

இந்த காரின் விலையை பொருத்தவரை ஐந்து விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி 1.5 லிட்டர் பெட்ரோல் சிவிடி கியர் பாக்ஸ் உடன் வரும் இந்த கார் ரூ21.24 லட்சம் என்ற விலையிலும், 2.0 லிட்டர் டீசல் மேனுவல் கியருடன் வரும் கார் ரூ21.94 லட்சம் என்ற விலையிலும்,

1.5 லிட்டர் பெட்ரோல் சிவிடி ஹெக்டர் பிளஸ் கார் ரூ21.97 லட்சம் என்ற விலையிலும், 2.0 லிட்டர் டீசல் மேனுவல் ஹெக்டர் பிளஸ் 7 சீட்டர் கார் ரூ22.54 லட்சம் என்ற விலையிலும், 2.0 லிட்டர் டீசல் ஹெக்டர் பிளஸ் 6 சீட்டர் கார் ரூ22.75 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் கார் மக்கள் மனதில் இடம் பிடித்த காராக இருக்கிறது. இந்த சாலையில் செல்லும்போது மக்களை திரும்பி பார்க்க வைக்கும் நிலையில் இருப்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்குகிறார்கள். அதுவும் முற்றிலும் கருப்பு நிறத்தையும் கொண்ட இந்த கார் நிச்சயம் கருப்பு நிற விரும்பிகளை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 11, 2024, 10:41 [IST]
English summary
Mg hector blackstorm edition india launch rs 21 to 24 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X