ஷோரூம்களுக்கு வர தொடங்கிய கருப்பு அரக்கன்... கொம்பன் எறங்கீட்டான்னு கதறும் போட்டி நிறுவனங்கள்...
இந்திய வாடிக்கையாளர்கள், கருப்பு நிற கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்களாக உள்ளனர். எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஏற்கனவே விற்பனையில் உள்ள தங்கள் கார்களில் 'டார்க் எடிசன்' (Dark Edition) மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதற்கு எம்ஜி (MG) நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.
எம்ஜி நிறுவனம் தனது டார்க் எடிசன் மாடல்களை, ப்ளாக்ஸ்ட்ரோம் (BlackStorm) என குறிப்பிடுகிறது. எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) ஆகிய கார்களில் ஏற்கனவே பிளாக்ஸ்ட்ரோம் எடிசன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில், எம்ஜி ஹெக்டர் (MG Hector) வரிசை கார்களில் தற்போது ப்ளாக்ஸ்ட்ரோம் எடிசன் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எம்ஜி ஹெக்டர் ப்ளாக்ஸ்ட்ரோம் எடிசன், 5 சீட்டர், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதன் ஆரம்ப விலை 21.25 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் இது அறிமுக சலுகை விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. முதலில் முன்பதிவு செய்யும் 250 பேருக்கு மட்டுமே இந்த விலையில் எம்ஜி ஹெக்டர் ப்ளாக்ஸ்ட்ரோம் எடிசன் கிடைக்கும். அதற்கு பிறகு விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், எம்ஜி ஹெக்டர் ப்ளாக்ஸ்ட்ரோம் எடிசன் நாடு முழுவதும் உள்ள ஷோரூம்களுக்கு தற்போது வர தொடங்கியுள்ளது.
எனவே கூடிய விரைவில் டெலிவரி பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளாக்ஸ்ட்ரோம் எடிசன், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். இதில் பெட்ரோல் இன்ஜினானது, அதிகபட்சமாக 141 பிஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மறுபக்கம் டீசல் இன்ஜினானது, அதிகபட்சமாக 168 பிஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. வசதிகளை பொறுத்த வரையில், லெவல் 2 அடாஸ், பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
இவை எல்லாம் தவிர, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்றவையும் எம்ஜி ஹெக்டர் ப்ளாக்ஸ்ட்ரோம் எடிசன் மாடலின் மிக முக்கியமான வசதிகளாக இருக்கின்றன.
அத்துடன் வழக்கமான எம்ஜி ஹெக்டர் உடன் ஒப்பிடும்போது, ப்ளாக்ஸ்ட்ரோம் எடிசன் மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஏராளமான டிசைன் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த புதிய மாடலில் 'ப்ளாக்ஸ்ட்ரோம்' என்ற பேட்ஜ்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ஏற்கனவே மிகவும் பிரபலமான ஒரு காராக உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் வந்துள்ள ப்ளாக்ஸ்ட்ரோம் எடிசன் மாடல் எம்ஜி ஹெக்டர் காரை இன்னும் பிரபலமாக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். எம்ஜி ஹெக்டர் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கு, ப்ளாக்ஸ்ட்ரோம் எடிசன் மாடல் உதவி செய்யலாம் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








