இந்தியர்கள் பலர் விரும்பி வாங்கும் எம்ஜி காரின் விலை மிக பெரிய அளவில் குறைப்பு.. இவ்ளோ ரூபா குறைச்சுட்டாங்களா!
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக ஹெக்டர் (Hector) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாகவும் இதுவே காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலின் விலையையே தற்போது எம்ஜி நிறுவனம் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிறுவனம் சமீபத்திலேயே இந்த கார் மாடலில் இரு வேறு புதிய வேரியண்டுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஷைன் ப்ரோ (Shine Pro) மற்றும் செலக்ட் ப்ரோ (Select Pro)-வே அதுவாகும். ரூ. 16 லட்சம் மற்றும் ரூ. 17.30 லட்சம் என்கிற விலையில் இவை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

மேலும், இந்த இரண்டு புதிய தேர்வுகளும் சற்று அதிக சிறப்பு வசதிகளையும், தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய தேர்வுகளாகக் காட்சியளிக்கின்றன. இவற்றின் அறிமுகத்தைத் தொடர்ந்தே தற்போது எம்ஜி நிறுவனம் ஆரம்ப நிலை தேர்வின் விலையைக் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 96 ஆயிரம் வரை அதன் விலையில் குறைக்கப்பட்டு இருக்கின்றது.
இதன் விளைவாக இப்போது எம்ஜி-யின் ஆரம்ப விலை 13 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக மாறி உள்ளது. முன்னதாக 14 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயாக அது இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் அதிகம் ரீ-சேல் வேல்யூ கொண்ட கார் மாடல்களில் ஹெக்டர்-ம் ஒன்றாகும்.
ட்ரூம் கடந்த கால ஆய்வின்படி, கிரெட்டா, செல்டோஸ் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார் மாடல்களின் டீசல் தேர்வைக் காட்டிலும் அதிகம் ரீ-சேல் வேல்யூக் கொண்டதாக ஹெக்டர் டீசல் தேர்வு இருப்பது தெரிய வந்தது. இத்தகைய கார் மாடலின் விலையையே தற்போது எம்ஜி குறைத்து அதிரடி காட்டி இருக்கின்றது.
இதன் வாயிலாக இந்திய எம்ஜி கார் பிரியர்கள் மேலும் குஷியில் ஆழ்ந்திருக்கின்றனர். எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவி காரில் இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளை வழங்குகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டு ஆப்ஷன்களும் இதில் வழங்கப்படுகின்றன. 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் ஆகிய எஞ்சின் தேர்வுகளே வழங்கப்படுகின்றன.
கியர்பாக்ஸை பொருத்தவரை பெட்ரோலில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும், டீசலை பொருத்த வரை மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஆகியவை மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்தியாவிலேயே மிகப் பெரிய போர்ட்ரைட் அமைப்புக் கொண்ட எச்டி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 75க்கும் மேற்பட்ட கார் இணைப்பு வசதி ஐ-ஸ்மார்ட் தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 வகை அடானமஸ் அம்சம் ஆகியவை இந்த காரில் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மாதிரியான அம்சங்களுக்காகவே இந்த காரை பலர் வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக அதிகம். ஸ்டீல் பாடி, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. இத்துடன், அடாஸ் அம்சத்தின் வாயிலாக அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், டிராஃபிக் ஜாம் அசிஸ்ட் போன்றவற்றை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போட்டியாளர்களைக் காட்டிலும் எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்தியாவில் சற்று வரவேற்பு குறைந்தேக் காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே விலை குறைப்பை எம்ஜி செய்திருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








