இந்த தீபாவளிக்கு வாங்க சரியான கார் வந்தாச்சு... விலையை கேட்டால் உடனே புக் பண்ணிடுவீங்க!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் பிரபலமான கார்களுள் ஒன்று ஹெக்டர் (Hector) மற்றும் அஸ்டர் (Astor) ஆகும். இந்த நிலையில், ஹெக்டர் மற்றும் அஸ்டர் கார்களில் புதியதாக ஸ்னோஸ்டோர்ம் (Snowstorm) மற்றும் பிளாக்ஸ்டோர்ம் (Blackstorm) எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு களமிறக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கார்களின் விலைகள் உள்பட கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்தியாவின் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்துடன் சமீபத்தில் இணைந்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இதனை தொடர்ந்து, விண்ட்சர் இவி என்கிற எலக்ட்ரிக் காரை எம்ஜி மோட்டார் களமிறக்கியது. பேட்டரி வாடகை திட்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.

hector snowstorm and astor blackstorm

இதே பாணியில், தனது கோமெட் இவி மற்றும் இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் கார்களையும் பேட்டரி வாடகை திட்டத்துடன் எம்ஜி மோட்டார் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், வரவிருக்கும் தீபாவளி, தசரா, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாக எம்ஜி ஹெக்டர் மற்றும் அஸ்டர் எஸ்யூவி கார்களில் புதியதாக ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டர் ஸ்னோஸ்டோர்ம் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21,52,800-இல் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிசன் கார் 5-சீட்டர், 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும். மறுபக்கம், அஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிசன் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13,44,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லிமிடெட் எடிசன் என அறிவிக்கப்பட்டுள்ளது.

hector snowstorm and astor blackstorm

அதாவது, அஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிசன் கார் குறிப்பிட்ட சில வாரங்களுக்கு மட்டுமே விற்பனையில் இருக்கும். ஆனால், ஹெக்டர் ஸ்னோஸ்டோர்ம் எடிசனை லிமிடெட் எடிசன் என எம்ஜி நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆதலால், இந்த கார் சில மாதங்களுக்கு விற்பனையில் இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். ஹெக்டர் ஸ்னோஸ்டோர்ம் எடிசன் காரின் வெளிப்பக்கம் 2-டோன்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், கருப்பு நிறத்தில் காருக்கு ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது. டார்க்கான க்ரோம் ஹைலைட்கள் இந்த காரை சுற்றிலும் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, காரின் முன்பக்கத்தில் டைமண்ட் மெஷ் க்ரில்லை சுற்றிலும் டார்க் க்ரோம் சரவுண்ட்டிங் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், காரின் முன் மற்றும் பின்பக்க பம்பரிலும் கார்னிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

hector snowstorm and astor blackstorm

காரின் 18-இன்ச் அலாய் சக்கரங்களும் கருப்பு நிறத்தில் உள்ளன. இவ்வாறு, காரை சுற்றிலும் நிறைய இடங்களில் கருப்பு நிறத்தை பார்க்க முடிகிறது. ஆனால், ஹெக்டர் ஸ்னோஸ்டோர்ம் எடிசன் காரின் பாடி ஆனது வெள்ளை நிறத்தில் உள்ளது. ஆனால் மறுப்பக்கம், அஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிசன் கார் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் உள்ளது. இதன் காரணமாகவே, இந்த காருக்கு பிளாக்ஸ்டோர்ம் என பெயர் வைத்துள்ளனர்.

இந்த காரின் முன்பக்கத்தில் தேன்கூடு பேட்டர்ன் க்ரில், ஹெட்லேம்ப்கள், பம்பர்கள் மற்றும் அலாய் சக்கரங்கள் என அனைத்து பாகங்களும் கருப்பு நிறத்தில் உள்ளன. அதேநேரம், அஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் காருக்கு உள்ளேயும், வெளியேயும் ஆங்காங்கே சிவப்பு நிற ஹைலைட்களை பார்க்க முடிகிறது. இந்த காரில் 80க்கும் அதிகமான ஐ-ஸ்மார்ட் வசதிகளையும், லெவல் 2 அடாஸையும் பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி ஹெக்டரில் மட்டுமில்லாமல், ஹெக்டர் பிளஸ் காரிலும் ஸ்னோஸ்டோர்ம் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும். கருப்பு- வெள்ளை காமினேஷன் இந்த கார்களில் சூப்பராக உள்ளது. அதேநேரம், முற்றிலுமாக கருப்பு நிறத்தில் கிடைக்கவுள்ள எம்ஜி அஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிசன் காரும் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 26, 2024, 11:34 [IST]
English summary
Mg hector snowstorm and astor blackstorm editions launched check price here
மேலும்... #mg motor #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X