எம்ஜி கோமெட்டை இவ்ளோ வேகமா சார்ஜ் செஞ்சுக்க முடியுமா? 3.5 மணி நேரத்திலேயே ஃபுல்லா சார்ஜாகிடும்!
இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் மாடலிலேயே ஃபாஸ்டர் 7.4kW ஏசி சார்ஜர் வசதி கொண்ட ஆப்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இதற்கு அறிமுகமாக ரூ. 8.24 லட்ச ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் ரூ. 6.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு கிடைக்கின்றது.

இதன் அதிகபட்ச விலையே ரூ. 9.14 லட்சம் மட்டுமே ஆகும். அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. எம்ஜி கோமெட் பேஸ் (Pace), பிளே (Play) மற்றும் பிளஷ் (Plush) ஆகிய ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. தற்போது இந்த வேரியண்ட் பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.
எக்சிகியூட்டீவ் (Executive), எக்சைட் (Excite) மற்றும் எக்ஸ்க்ளூசீவ் (Exclusive) ஆகிய ட்ரிம்களிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. சமீபத்திலேயே எம்ஜி நிறுவனம் இதன் விலையை குறைத்தது. இதன் விளைவாகவே இந்தியாவின் மிக மிக விலை குறைவான காராக எம்ஜி கோமெட் இவி மாறியது.
புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசீவ் ஆகிய தேர்வுகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்துத. ஆனால், வழக்கமான எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசீவ் ஆகியவற்றைக் காட்டிலும் இதன் விலை சற்று அதிகம் ஆகும். எக்ஸைட் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு ரூ. 8.24 லட்சமும், எக்ஸ்க்ளூசீவ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு ரூ.9.14 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
இதை வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 3.5 மணி நேரங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீத சார்ஜை ஏற்றிவிட முடியும். அதேவேளையில், 3.3 kW ஏசி சார்ஜரை பயன்படுத்தும்போது 7 மணி நேரங்கள் முழுமையாக சார்ஜ் செய்ய எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இந்த சூப்பரான ரேஞ்ச் திறனுக்காக எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் 17.3 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஃபாஸ்ட் சார்ஜிங் வேரியண்டுகளின் ரியர் வீலில் டிஸ்க் பிரேக்குகளும், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்கும், இஎஸ்சி, ஹில் ஹோல்டு கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஃபோல்டபிள் ரியர் வியூ மிர்ரர் (உடல் நிறத்தில் இருக்கும்) என ஏகப்பட்ட சிறப்புகள் இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அம்சங்கள் சேர்ப்பால் ரூ. 56 ஆயிரம் இதன் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், கோமெட் இவி-க்கு இந்த விலை உயர்வு ஒர்த்தானதாக தெரிவதாக வாகன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். எம்ஜி கோமெட் இவியில் வழங்கப்பட்டு இருக்கும் மின்சார மோட்டார் அதிகபட்சமாக 42 எச்பி மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரின் விலையை சமீபத்திலேயே எம்ஜி நிறுவனம் குறைத்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 1.40 லட்சம் வரை குறைத்தது. ஆகையால், தற்போது ரூ. 6.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே சமீபத்தில் கோமெட் இவியின் விலையை குறைத்தது எம்ஜி. இதன் விளைவாக வரும் நாட்களில் இந்த மின்சார காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








