இந்த மாதிரியான கார் எல்லாம் ஏன் இந்தியா வர மாட்டிங்குது? சார்ஜ் பண்ணால் போது 500கிமீ பயணம்!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாக, உலகின் பல நாடுகளில் புது எம்ஜி எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், மத்திய கிழக்கு நாடுகளில் எம்ஜி மோட்டாரின் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்த மாதிரியான எலக்ட்ரிக் கார் அது? என்பதையும், அதற்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள விலை குறித்த விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பழமையான கார் நிறுவனமாக இருந்தாலும், தற்சமயம் சீனாவை சேர்ந்த ஒரு குழுமத்தின் கீழ் எம்ஜி மோட்டார் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் எம்ஜி நிறுவனம் அதன் முதல் காரை அறிமுகம் செய்தது. தற்சமயம் பல்வேறு விதமான உடலமைப்புகளில் இந்தியாவில் கார்களை எம்ஜி விற்பனை செய்கிறது.

mg4 launched in middle east

இந்த வகையில், எலக்ட்ரிக் கார்களையும் நம் நாட்டில் எம்ஜி விற்பனை செய்கிறது. எம்ஜி கோமெட் இவி, இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் காராக விளங்குகிறது. வரும் ஆண்டுகளில் இதேபோன்று புது, புது எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் விற்பனை செய்யும் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளிலும் அதிகரிக்கும் முனைப்பில் எம்ஜி மோட்டார் உள்ளது.

அந்த வகையில், மத்திய கிழக்கு நாடுகளில் எம்ஜி4 என்கிற புதிய எலக்ட்ரிக் காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா என மொத்தம் 21 நாடுகள் சேர்ந்தது மத்திய கிழக்கு நாடுகள் எனப்படுகின்றன. இந்த நாடுகளில் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா என 3 கண்டத்தை சேர்ந்த சில நாடுகள் அடங்குகின்றன.

mg4 launched in middle east

கச்சா எண்ணெய் உள்ளிட்ட மூலாதாரங்களின் மூலமாக பொருளாதாரத்தில் வேகமாக முன்னேற்றம் கண்டுவரும் நாடுகளாக இவை உள்ளன. இத்தகைய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஜி4 எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 26,150 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.22 லட்சம் ஆகும். காம், லக்ஸ் மற்றும் எக்ஸ் பவர் என 3 விதமான வேரியண்ட்களில் எம்ஜி4 மத்திய கிழக்கு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் காம் வேரியண்ட்டில் 51kWh திறன் கொண்ட பேட்டரி கிடைக்கும். இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 465கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். லக்ஸ் வேரியண்ட்டில் இன்னும் சற்று பெரியதாக 64kWh பேட்டரி கொடுக்கப்படும். இதனை சார்ஜ் நிரப்பினால் 530கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்றும், டாப் எக்ஸ் பவர் வேரியண்ட்டில் 400கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்றும் எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

mg4 launched in middle east

எலக்ட்ரிக் மோட்டார் வழங்கும் இயக்க ஆற்றல்கள் காரின் பின் சக்கரங்களுக்கு செல்வதால், எம்ஜி4 எலக்ட்ரிக் காரில் ஆக்ஸலரேஷனும், டிராக்‌ஷனும் சிறப்பாக கிடைக்கும் என எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது. ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட், கஸ்டம், ஸ்னோ மற்றும் ஈக்கோ என 5 விதமான டிரைவிங் மோட்கள் இந்த காரில் கிடைக்கும். இதில், ஈக்கோ மோடில் டிரைவர் தனது டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப டிரைவிங் மோட்-ஐ செட் செய்து கொள்ள முடியும்.

பயணிகளின் பாதுகாப்புக்கு எலக்ட்ரானிக் ஸ்டேரிங் சிஸ்டம், ஒன் பாக்ஸ் பிரேக் சிஸ்டம் மற்றும் பேட்டரி வெப்பம் அடைவதை தடுக்கும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை இந்த காரில் பெறலாம். இவற்றுடன், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை போன்றவையும் எம்ஜி4 காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு பல்வேறு விதமான பெயிண்ட் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எக்ஸ் பவர் வேரியண்ட்டில் கவர்ச்சிக்கரமான பச்சை நிறத்தில் இந்த கார் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் ஆண்டுகளில் இந்தியாவிலும் எம்ஜி4 எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இந்த எம்ஜி எலக்ட்ரிக் கார், தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலும் விற்பனையை துவங்கியுள்ளது. இதனால், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே நினைக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 20, 2024, 8:00 [IST]
English summary
Mg mg4 electric car launched in middle east check price all details here
மேலும்... #mg motor #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X