காரா இல்ல சொகுசு கப்பலா? மினி தியேட்டர் ரேஞ்சுக்கு இருக்கு! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!

எம்ஜி மோட்டார் (MG Motor), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக, சமீப காலமாக எம்ஜியில் இருந்து தொடர்ந்து புது, புது எலக்ட்ரிக் கார்கள் அடுத்தடுத்ததாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக, மிஃபா 9 என்கிற எலக்ட்ரிக் எம்பிவி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் அறிமுக தேதி குறித்த விபரத்தையும், எம்ஜி மிஃபா 9 எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகியின் பாணியில் நிறைய கார் நிறுவனங்கள் தங்களது கார்களை இரு விதமான டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளன. அதாவது, விலை குறைவான கார்களை ஒரு விதமான ஷோரூமிலும், விலைமிக்க கார்களை வேறொரு விதமான ஷோரூமிலும் விற்பனை செய்கின்றன. இதன் மூலமாக, அந்தந்த வாடிக்கையாளர்களை பொறுத்து அவர்களை கவர்வதற்கான யுக்திகளை கார் நிறுவனங்களால் வகுக்க முடிகிறது.

mg mifa 9 india launch

மாருதி சுஸுகி நிறுவனம் இந்த வகையில் அரேனா, நெக்ஸா என 2 விதமான டீலர்ஷிப் ஷோரூம்களை நாடு முழுவதும் கொண்டிருக்கும் நிலையில், அதே ஃபார்முலாவை உபயோகித்து எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் புதிய 'எம்ஜி செலக்ட்' டீலர்ஷிப் நெட்வொர்க்கை செயல்படுத்த உள்ளது. எம்ஜி செலக்ட் ஷோரூம்களில் எம்ஜி அஸ்டர், எம்ஜி கோமெட் இவி போன்ற விலை குறைவான கார்கள் இல்லாமல், சற்று விலைமிக்க கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த பிரீமியம் டீலர்ஷிப் நெட்வொர்க்கில் விற்பனை செய்யப்பட உள்ள முதல் கார், எம்ஜி சைபர்ஸ்டர் ரோட்ஸ்டர் ஆகும். இதனை தொடர்ந்து உடனடியாக மிஃபா 9 என்கிற எலக்ட்ரிக் எம்பிவி காரை எம்ஜி அறிமுகம் செய்ய உள்ளது. மிஃபா 9 ஆனது எம்ஜி மோட்டாரின் விலைமிக்க லக்சரியான எம்பிவி காராக விளங்குகிறது. இதனை கடந்த 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் காட்சிப்படுத்தியது.

mg mifa 9 india launch

ஆனால், மிஃபா 9 எலக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் இப்போதைக்கு இருக்காது என எம்ஜி நிறுவனம் அப்போது தெரிவித்தது. அதன்படி, கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு எம்ஜி மிஃபா 9 எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வருகிற 2025 மார்ச் மாதத்தில் எம்ஜி மிஃபா 9 அறிமுகம் செய்யப்படலாம்.

2023 ஆட்டோ எக்ஸ்போவை தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவிலும் எம்ஜி மிஃபா 9 எலக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டது. இதனால், இந்த எலக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், பாரத் மொபைலிட்டி 2024 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதற்கு பிறகு 1 வருடத்திற்கும் மேல் கழித்து எம்ஜி மிஃபா 9 எலக்ட்ரிக் எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

mg mifa 9 india launch

இந்த பிரம்மாண்டமான எம்ஜி எலக்ட்ரிக் காரின் விலை ஏறக்குறைய ரூ.65 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம். எம்ஜி மிஃபா 9 எலக்ட்ரிக் காருக்கு விற்பனையில் டொயோட்டாவின் வெல்ஃபையர் மற்றும் கியா கார்னிவல் கார்கள் போட்டியாக உள்ளன. டொயோட்டா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 100 வெல்ஃபையர் கார்களையும், கியா நிறுவனம் 300 கார்னிவல் கார்களையும் விற்பனை செய்கிறது.

எம்ஜி நிறுவனம் மிஃபா 9 எலக்ட்ரிக் எம்பிவி காரை எவ்வாறு உருவாக்க உள்ளது என்பது தெரியவில்லை. ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதன்மை மேம்பாட்டு அதிகாரி கௌரவ் குப்தா முன்னதாக அளித்த பேட்டியில், உள்நாட்டு உற்பத்தி தான் சிறந்த முடிவாக இருக்கும் என்பதுபோல் தெரிவித்து இருந்தார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி செலக்ட் ஷோரூம்களில் விற்பனை செய்வதற்கு மிஃபா 9 ஆனது சரியான காராகும். எம்ஜி செலக்ட் ஷோரூம்கள் முதற்கட்டமாக இந்தியாவில் 12 இடங்களில் மட்டுமே நிறுவப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆரம்பத்தில் எம்ஜி மிஃபா 9 எலக்ட்ரிக் காரின் விற்பனை பெரிய அளவில் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 9, 2024, 19:25 [IST]
English summary
Mg mifa 9 electric mpv car india launch in march 2025 check all details here
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X