நம்ம தாத்தா காலத்தில் இருந்து கார்களை தயாரிச்சிட்டு வராங்க!! 100 வருஷம் என்றால் சும்மா இல்ல...!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் அதன் 100ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக இந்தியாவில் அதன் கார்களின் புதிய ஸ்பெஷல் எடிசன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எம்ஜி கார்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகின் மிக பழமையான ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று எம்ஜி மோட்டார் ஆகும். இங்கிலாந்தில் தோன்றி இருந்தாலும், சீனாவை சேர்ந்த குழுமத்தின் கீழ் தற்சமயம் செயல்பட்டுவரும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில்தான் நுழைந்தது. இந்தியாவில் எம்ஜி அறிமுகம் செய்த முதல் கார் ஹெக்டர் ஆகும்.

mg motor 100-year limited edition

அதன்பின் அடுத்தடுத்த வருடங்களில் புது, புது கார்களை எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்தது. 1921ஆம் ஆண்டில் கார்கள் உற்பத்தியை துவங்கிய எம்ஜி மோட்டார் நிறுவனம் 2021இல் 100 வருடங்களை நிறைவு செய்தது. இதனை 2021ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு நாடுகளில் எம்ஜி மோட்டார் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இந்தியாவிலும், இதனை கொண்டாடும் விதமாக சில பல புதிய திட்டங்கள் துவங்கப்பட்டன; சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக தற்போது, இந்தியாவில் எம்ஜி கார்களில் புதிய ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. '100-இயர் லிமிடெட் எடிசன்' என்கிற பெயரில் எம்ஜி மோட்டாரின் ஹெக்டர், கோமெட் இவி, இசட்.எஸ் இவி மற்றும் அஸ்டர் கார்களில் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஸ்பெஷல் எடிசன்கள் என சொல்வதை காட்டிலும் இவற்றை லிமிடெட் எடிசன்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில், இவை குறிப்பிட்ட சில காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும். இந்த லிமிடெட் எடிசன் எம்ஜி கார்கள் பிரிட்டிஷ் ரேசிங் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இந்த பச்சை நிறத்தை 'ஸ்பெஷல் எவர்க்ரீன்' என எம்ஜி மோட்டார் நிறுவனம் அழைக்கிறது. இந்த எம்ஜி கார்கள் அடர் பச்சை நிறத்தில் இருந்தாலும், கார்களின் ரூஃப் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

'100-இயர் எடிசன்' முத்திரைகளை கார்களின் பின்பக்க டெயில்கேட் மற்றும் காருக்கு உள்ளே முன் இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்களில் காண முடிகிறது. காரின் வெளிப்பக்க நிறம் மட்டுமின்றி, காருக்கு உள்ளே ஓட்டுனருக்கு எதிரே கொடுக்கப்படும் ஹெட் யூனிட் திரையும் எவர்க்ரீன் தீமில் கிடைக்கும். இந்த திரையின் விட்ஜெட் நிறத்தை விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ்ட் செய்து கொள்ள முடியும்.

மற்றப்படி, கார்களின் மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. எம்ஜி நிறுவனம் அதன் க்ளோஸ்டர் காரை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, டீசல் என்ஜின் உடன் க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த லிமிடெட் எடிசன் கார்களின் அறிமுகம் குறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதன்மை கமர்ஷியல் அதிகாரி சாதிந்தர் சிங் பஜ்வா கூறுகையில், "எங்கள் 100-இயர் லிமிடெட் எடிசன்களின் அறிமுகமானது, எங்களின் நீடித்த மரபு மற்றும் வாகன சிறப்பிற்கான ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும். 'எவர்க்ரீன்' நிறம் நம் இதயங்களில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அதன் கார்களில் ஸ்பெஷல் எடிசன்களை இந்த ஆண்டில் அறிமுகம் செய்வது இது ஒன்றும் முதல்முறை கிடையாது. ஏற்கனவே பிளாக் ஸ்டோர்ம் என்ற பெயரில் எம்ஜி கார்களின் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 100-இயர் லிமிடெட் எடிசன்கள் இந்தியாவில் எத்தனை கார்கள் விற்பனை செய்யப்படும் என்கிற விபரத்தை எம்ஜி வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2024, 22:47 [IST]
English summary
Mg motor 100 year limited edition cars introduced check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+