இந்த 2024 தீபாவளியில் விற்பனைக்கு வரும் புது எலக்ட்ரிக் கார்!! இப்போதே பணத்தை சேர்த்து வைக்க ஆரம்பிச்சிடுங்க..

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் காரை இந்த 2024ஆம் ஆண்டு பண்டிகை காலத்தின்போது இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காரை பற்றியும், தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் உள்ள எம்ஜி கார்களை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் 2019ஆம் ஆண்டில் முதல்முறையாக ஹெக்டர் காரின் மூலமாக இந்திய மார்க்கெட்டில் நுழைந்தது. எம்ஜி ஹெக்டர் கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வாங்கினர். அதன்பின், ஹெக்டர் மூலம் கிடைத்த தைரியத்தில் இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் காரை எம்ஜி மோட்டார் களமிறக்கியது.

mg motors 3rd electric car

எம்ஜி இசட்.எஸ் இவி என்ற பெயரில் 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்த எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கடுத்து க்ளோஸ்டர், அஸ்டர் மேலும் சில கார்களை எம்ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. எலக்ட்ரிக் கார்களை பொறுத்தவரையில், இசட்.எஸ் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டில் கோமெட் இவி என்ற விலை குறைவான எலக்ட்ரிக் காரை இந்தியாவில் எம்ஜி அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், எம்ஜி நிறுவனம் அதன் 3வது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்திய எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சபா, எம்ஜி நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்றை இந்த 2024ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

mg motors 3rd electric car

எம்ஜி மோட்டாரின் தாய் நிறுவனமான சீனாவை சேர்ந்த SAIC மோட்டாரும், இந்தியாவின் ஜே.எஸ்.டபிள்யூ குழுமமும் சமீபத்தில்தான் கூட்டணி சேர்வதாக அறிவித்தன. இதன்படி, இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் செயல்பாடுகளை ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் கவனித்துக் கொள்கிறது. இந்த கூட்டணி ஏற்பட்ட பிறகு எம்ஜி பிராண்டில் இருந்து வெளிவரும் முதல் வாகனமாக இந்த எலக்ட்ரிக் கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை பெரிய அளவில் இல்லை. விற்பனையாகும் மொத்த கார்களில் வெறும் 2% மட்டுமே எலக்ட்ரிக் கார்களாக இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், எம்ஜி நிறுவனம் தனது 3வது எலக்ட்ரிக் காரை மார்க்கெட்டில் களமிறக்க தயாராகி வருகிறது. இதற்கு காரணம், எம்ஜி நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனையாகும் 4இல் 1 கார் எலக்ட்ரிக் காராக உள்ளது.

mg motors 3rd electric car

குறிப்பாக, கோமெட் இவி அறிமுகத்திற்கு பிறகு எம்ஜியின் பிராண்ட் மதிப்பு அதிகரித்துள்ளது. எம்ஜி மட்டுமின்றி, மொத்த இந்தியாவிலும் 2030ஆம் ஆண்டு முடிவதற்குள் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை ஆனது 15% - 20% ஆக அதிகரித்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், நிறைய முன்னணி கார் நிறுவனங்கள் எலக்ட்ரிக்கில் கார்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. இதில் எம்ஜி மோட்டார் நிறுவனம் மட்டும் என்ன விதிவிலக்கா...

மற்றப்படி, இந்த 2024ஆம் ஆண்டிற்குள் எந்த எலக்ட்ரிக் காரை எம்ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. கடந்த 2023இன் துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி4 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார், எம்ஜி5 எலக்ட்ரிக் எஸ்டேட் கார் மற்றும் மிஃபா 9 எலக்ட்ரிக் எம்பிவி கார்களை எம்ஜி நிறுவனம் காட்சிக்கு நிறுத்தியது. இதில் ஏதேனும் ஒரு எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படலாம்.

mg motors 3rd electric car

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோ எக்ஸ்போவில் ஏற்கனவே காட்சிப்படுத்திய எலக்ட்ரிக் காரை தான் இந்தியாவில் அடுத்ததாக எம்ஜி அறிமுகம் செய்யும் என்றில்லை. ஏனெனில், முற்றிலும் வித்தியாசமாக ஒரு புதுமையான காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்வதற்கும் வாய்ப்புள்ளது. சீனாவில் விற்பனையில் உள்ள போஜுன் யெப் பிளஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் பெயரும் கொஞ்சம் அடிப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 21, 2024, 13:28 [IST]
English summary
Mg motor gearing up to launch its 3rd electric car check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X