ரூ.20 லட்சத்துக்குள் இந்த சூப்பரான எலக்ட்ரிக் காரை இந்தியாவில் வாங்கலாமா!! சன்ரூஃப்-காகவே இந்த காரை வாங்கலாம்!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் அதன் இசட்.எஸ் (ZS) எலக்ட்ரிக் காரில் புதிய எக்ஸ்சைட் புரோ (Excite Pro) வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வேரியண்ட்டின் விலை உள்பட, இந்த எலக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2019இல் ஹெக்டர் எஸ்யூவி கார் மூலமாக இந்தியாவில் நுழைந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் பின்னர் தனது முதல் எலக்ட்ரிக் காராக இசட்.எஸ் மாடலை 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. அந்த சமயத்தில் இந்தியாவில் விற்பனையில் இருந்த மிகவும் சில எலக்ட்ரிக் கார்களுள் ஒன்று எம்ஜி இசட்.எஸ் ஆகும்.

mg zs excite pro introduced

அதன்பின், கடந்த 4 வருடங்களில் சிலமுறை இசட்.எஸ் எலக்ட்ரிக் காரை எம்ஜி நிறுவனம் அப்டேட் செய்தது. இந்த நிலையில் தற்போது, எம்ஜி இசட்.எஸ் எலக்ட்ரிக் காரில் புதியதாக எக்ஸ்சைட் புரோ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய இசட்.எஸ் எக்ஸ்சைட் புரோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.98 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

புதிய இசட்.எஸ் எக்ஸ்சைட் புரோ காரில் மிக முக்கிய அம்சமாக ட்யூயல்-பேன் பனோராமிக் சன்ரூஃப் கிடைக்கும். இதன் மூலமாக, இந்தியாவில் ரூ.20 லட்சத்திற்குள் ட்யூயல்-பேன் பனோராமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் ஒரேயொரு எலக்ட்ரிக் காராக இசட்.எஸ் விளங்குவதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.19.98 லட்சத்திற்கும் குறைவான விலையிலும் எம்ஜி இசட்.எஸ் கார் கிடைக்கிறது.

அதாவது, இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டான எக்ஸ்க்யூட்டிவ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.99 லட்சமாக உள்ளது. ஆனால், இசட்.எஸ் எக்ஸ்க்யூட்டிவ் வேரியண்ட்டில் ட்யூயல்-பேன் பனோராமிக் சன்ரூஃப் கிடைக்காது. எம்ஜி இசட்.எஸ் காரின் விலையுயர்ந்த எக்ஸ்க்ளூசிவ் பிளஸ் வேரியண்ட்டின் விலையை காட்டிலும் புதிய எக்ஸ்சைட் புரோ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4 லட்சம் குறைவாக உள்ளது.

புதிய எக்ஸ்சைட் புரோ வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த விரிவான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த புதிய வேரியண்ட்டில் ட்யூயல்-பேன் பனோராமிக் சன்ரூஃப் கிடைக்கும் என்கிற விபரம் மட்டுமே தற்போதைக்கு நமக்கு கிடைக்க பெற்றுள்ளது. புதிய எக்ஸ்சைட் புரோ வேரியண்ட்டின் அறிமுகத்தினால், இதற்குமுன் இசட்.எஸ் எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு வந்த எக்ஸ்சைட் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்திக் கொள்ளப்பட்டு உள்ளது.

எக்ஸ்சைட் வேரியண்ட்டில் வழங்கப்பட்டு வந்த அத்தனை அம்சங்களையும் புதிய எக்ஸ்சைட் புரோ வேரியண்ட்டில் எதிர்பார்க்கலாம். புதிய எக்ஸ்சைட் புரோ வேரியண்ட்டின் அறிமுகத்துடன், இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் மற்ற வேரியண்ட்களையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் திருத்தியமைத்துள்ளது. இதன்படி, எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் பெயர் எக்ஸ்க்ளூசிவ் பிளஸ் எனவும், விலையுயர்ந்த எக்ஸ்க்ளூசிவ் புரோ வேரியண்ட்டின் பெயர் எஸ்சென்ஸ் எனவும் மாற்றப்பட்டு உள்ளது.

இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் டாப் எஸ்சென்ஸ் வேரியண்ட்டில் 360-டிகிரி கேமரா, 10.1-இன்ச் டச் ஸ்க்ரீன், வயர்லெஸ் சார்ஜர், 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றையும், பயணிகளின் பாதுகாப்புக்கு அடாஸ், 6-ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் டெசண்ட் கண்ட்ரோல் போன்றவற்றையும் பெற முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி மோட்டார் நிறுவனம் மிக சமீபத்தில்தான் அதன் பிரபலமான ஹெக்டர் காரில் புதியதாக ஷைன் புரோ மற்றும் செலக்ட் புரோ என்கிற இரு வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது, இசட்.எஸ் எலக்ட்ரிக் காரில் புதிய எக்ஸ்சைட் புரோ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டின் அறிமுகத்தினால், முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்சைட் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டாலும், இன்னும் சில காலத்திற்கு சில ஷோரூம்களில் இந்த வேரியண்ட் கிடைக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 5, 2024, 22:54 [IST]
English summary
Mg motor introduced new excite pro variant of zs electric car price new features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+