மாருதி, டாடா எல்லாம் இந்த கார் கம்பெனிய பார்த்து தொடை நடுங்குறாங்க! எதிர்காலத்துல வச்சு செய்யப்போறாங்க!
மார்ச் மாதம் துவங்கிவிட்ட நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் நாங்கள் விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றன அதன்படி எம்ஜி மோட்டார் நிறுவனமும் தனது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் எம்ஜி நிறுவனம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்தது என்ற விவரங்களை வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் ஒரே ஆண்டு விற்பனையில் 8.08 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது. அதே நேரம் கடந்த ஜனவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது 18.48% விற்பனை வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதற்கான அறிகுறி நமக்கு தெரிகிறது. எம்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன விற்பனையும் 33% அதிகரித்துள்ளது.

எம்ஜி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் மொத்தம் 4532 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4193 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 339 வாகன எண்ணிக்கை விற்பனை அதிகரித்துள்ளதால் 8.08% விற்பனை அதிகமாகியுள்ளது. இது அந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதற்கான அறிகுறியாக தெரிகிறது.
அடுத்ததாக கடந்த ஜனவரி மாத விற்பனையான 3825 இன்றைய விற்பனை எண்ணிக்கையுடன் கடந்த பிப்ரவரி மாத எண்ணிக்கையான 4532 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது 77 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இது 18.48 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். இந்த ஆண்டு எம்ஜி நிறுவனத்திற்கு சிறப்பான துவக்கமாகவே இருக்கிறது.

எம்ஜி நிறுவனத்தை பொறுத்தவரை இசட்எஸ் இவி மற்றும் கோமெட் இவி ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் காரர்களை விற்பனை செய்து வருகிறது. இதன் விற்பனையை பார்க்கும் போது 33 சதவீதம் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. மக்கள் மத்தியில் எம்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல பெயர் கிடைத்து வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் எதிர்காலத்தில் எலெக்டரிக் வாகனங்களின் விற்பனை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் கார்களின் விற்பனையை பின்னுக்குதள்ளி எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகம் விரும்புவார்கள் என கூறப்படும் நிலையில் இந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக எம்ஜி நிறுவனமும் தற்போது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் அவர்களை எம்ஜி நிறுவனமும் விற்பனைக்கு கொண்டு வந்து எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. விரைவில் பல எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரலாம்.
எம்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை பிடித்ததிலிருந்து தொடர்ந்து வளர்ச்சியை பெற்று வருகிறது. அந்நிறுவனத்திற்கு இந்திய மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. தரமான கார்களை தயாரிக்கும் நிறுவனம் என மக்கள் இந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதனால் இந்நிறுவனத்தின் கார்களின் விற்பனை கணிசமான அளவு உயர்ந்து கொண்டே வருகிறது.
எதிர்காலத்தில் எம்ஜி நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை களமிறக்குவதன் மூலம் மட்டுமே மிகப்பெரிய அளவில் போட்டியை கொடுக்க முடியும். மாருதி, டாடா போன்ற மிகப்பெரிய நிறுவனமாக வளர வேண்டும் என்றால் தனது தயாரிப்புத் திறனையும் தயாரிப்பு எண்ணிக்கையையும் அதிகப்படுத்த நிறுவனம் முயற்சி செய்ய வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையை சந்தித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு எம்ஜி நிறுவனத்திற்கு சிறந்த ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றுள்ளதால் இதன் விற்பனை அதிகரித்து எம்ஜி நிறுவனம் இந்தியாவில் அடுத்த கட்ட வளர்ச்சியை சந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications









