இவ்ளோ கம்மியான விலையில் எலெக்ட்ரிக் காரா! பைக் வாங்கற காசுல இதை வாங்கீரலாம்! ஷோரூம்களில் கூட்டம் அலைமோதுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று எம்ஜி மோட்டார் (MG Motor). இந்த நிறுவனத்தின் நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் (April) மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி எம்ஜி மோட்டார் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் 4,485 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 4,551 ஆக இருந்தது. இது 1.4 சதவீத வீழ்ச்சி ஆகும். வருடாந்திர ரீதியில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலும் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனையில் வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. அதாவது எம்ஜி மோட்டார் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் 4,648 கார்களை விற்பனை செய்து அசத்தியிருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை, அதன்பின் வந்த ஏப்ரல் மாதம் 4,485 ஆக சரிந்துள்ளது. இது 3.5 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் இது சிறிய அளவிலான வீழ்ச்சிதான். எனவே வரும் மாதங்களில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த சரிவில் இருந்து உடனடியாக மீண்டு வரும் என நம்பலாம்.
இங்கே ஆச்சரியம் அளிக்கு விஷயம் என்னவென்றால், நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்த ஒட்டுமொத்த கார்களின் எண்ணிக்கையில்,34 சதவீதம் எலெக்ட்ரிக் கார்கள் ஆகும். எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதையே இது காட்டுகிறது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகியவை ஆகும். இதில், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 6.99 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.24 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது ஒரு சில பிரீமியம் பைக்குகளை விட குறைவான விலை என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 18.98 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 25.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவிற்கு என்ன காரணம்? என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் இது சிறிய அளவிலான வீழ்ச்சிதான். எனவே எம்ஜி மோட்டார் நிறுவனம் வெகு விரைவிலேயே இந்த சரிவில் இருந்து மீண்டு விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எம்ஜி மோட்டார் நிறுவனம் வரும் காலங்களில் இந்திய சந்தையில் நிறைய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதில், எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Gloster Facelift) மிகவும் முக்கியமானது ஆகும். இன்னும் ஒரு சில மாதங்களில், எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








