பேட்டரிக்கு காசு கொடுக்காம கார மட்டும் வாங்கலாம்! ரூ.3.5லட்சத்தை மிச்சம் பண்ண கூடிய காருக்கு புக்கிங் தொடக்கம்

விண்ட்ஸர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங்கை ஏற்கும் பணிகளை எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் நாடு முழுவதும் தொடங்கி உள்ளது. ஆன்லைன் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஷோரூம்கள் வாயிலாக இந்த காரை புக் செய்துக் கொள்ள முடியும். அதுவும், ஒரு பட்ஜெட் செல்போனை வாங்கும் தொகையிலேயே இந்த காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ரூ. 11 ஆயிரம் முன்தொகையிலேயே புக்கிங்குகள் ஏற்கப்படுகின்றது. விண்ட்ஸர் இவி ஓர் இன்டலிஜெண்ட் சியூவி (Intelligent CUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

இதுவே இந்தியாவின் முதல் சியூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த காருக்கு எதிர்பார்ப்பு மிக பலமாக இருந்து வந்தநிலையிலேயே சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மேலும், யாரும் எதிர்பார்த்திராத விலையையும் இதற்கு நிர்ணயித்தது, எம்ஜி நிறுவனம். மிகவும் பிரமாண்டமான தோற்றத்தில் இருக்கும் இந்த சியூவி ரக எலெக்ட்ரிக் காருக்கு ரூ. 13.49 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.

Mg opens booking for windsor ev

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதுதவிர, எந்தவொரு கார் நிறுவனமும் வழங்க முன் வராத 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' எனும் திட்டத்தின்கீழும் இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன்கீழ் விண்ட்ஸர் இவி-யை வாங்கும்பட்சத்தில் ரூ. 9.99 லட்சத்திற்கே வாங்கிக் கொள்ள முடியும்.

அதாவது, ரூ. 3.5 லட்சத்தை இந்த திட்டத்தின்கீழ் மிச்சப்படுத்த முடியும். அதேவேளையில், ஒரு கிமீ பயணத்திற்கு கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ. 3.5 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இதுவே பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தின் சிறப்பாகும். பேட்டரி நமக்கு சொந்தம் இல்லை என்கிற காரணத்தினால் பயன்பாட்டிற்கு ஏற்ப அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.

விண்ட்ஸர் இவி மொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எக்சைடு, எக்ஸ்க்ளூசீவ் மற்றும் எஸ்சென்ஸ் ஆகியவையே அவை ஆகும். இந்த மூன்று வேரியண்டுகளையும் பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தின்கீழ் வாங்கிக் கொள்ள முடியும். அனைத்திலும் ரூ. 3.5 லட்சம் வரை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.

மூன்று வேரியண்டுகளிலும் ஒரே மாதிரியான பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. 136 பிஎஸ் திறனை வெளியற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் ஓர் முழு சார்ஜில் 332 கிமீ ரேஞ்சை வழங்கும் பேட்டரி பேக் ஆகியவையே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

எம்ஜி நிறுவனம் இந்த காரை செடான் மற்றும் எஸ்யூவி கார்களில் காணப்படும் கம்ஃபோர்ட்டை தரும் வகையில் தயார் செய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இதற்கேற்ப லக்சூரி கார்களில் காணப்படக் கூடிய வகையிலான இருக்கைகளை இந்த காரில் எம்ஜி வழங்கி இருக்கின்றது. இந்த காரில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

மேலும், இதன் பின் இருக்கையை 60:40 அளவில் மடித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த காரில் கூடுதல் லக்கேஜ்களையும் ஏற்றிச் செல்ல முடியும். இதுமட்டுமில்லைங்க அதிக பிரீமியம் தர அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கிய காராகவும் இது காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், விமானத்தில் காணப்படக் கூடிய இருக்கைகளையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 135 டிகிரி வரை அதை சாய்த்துக் கொள்ள முடியும். இதுதவிர, பெரிய சன்ரூஃப், 10.1 அங்குல அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் பார்க்கிங் பிரேக் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தங்கள் பக்கம் திருப்பும் பொருட்டு எம்ஜி நிறுவனம் பேட்டரி அஸ் எ சர்வீஸ திட்டத்தின்கீழ் விண்ட்ஸர் இவி-யை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2024, 10:26 [IST]
English summary
Mg opens booking for windsor ev at just rs 11000 more details here
மேலும்... #MG Windsor EV #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+