மாப்புள்ளைக்கு ரொம்ப அவசரம்போல! இன்னும் ஷோரூமையே திறக்கல அதுக்குள்ள 4 காரை வெளியீடு செய்ய போகுதா!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம், இந்தியாவின் மின்சார கார் (Electric car) பிரிவை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கிவிட்டது. முன்னதாக இந்த இடத்தை டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ஸே ஆதிக்கம் செய்து வந்தது. இதைத்தொடர்ந்து, இந்த நிறுவனம் தன்னுடைய பார்வையை பிரீமியம் கார்கள் பிரிவின் பக்கமும் திருப்பி இருக்கின்றது. இந்த பிரிவிற்காக அது பிரத்யேகமான ஷோரூம்களை திறக்கவும் முடிவு செய்திருக்கின்றது. அந்த ஷோரூம் 'எம்ஜி செலக்ட்' (MG Select) எனும் பெயரிலேயே சந்தையில் செயல்படும்.

அதாவது, மாருதி சுஸுகி (Maruti Suzuki) எப்படி பட்ஜெட் மற்றும் பிரீமியம் கார்களுக்கு என தனித்தனி ஷோரூம்களை செயல்படுத்தி வருகின்றதோ, அதைபோலவே, எம்ஜி-யும் வழக்கமான மற்றும் அதிக ஆடம்பர அம்சங்களை தாங்கிய கார்கள் என தனித்தனி ஷோரூம்கள் வாயிலாக விற்பனைச் செய்ய இருக்கின்றது.

MG select premium showroom car models

தன்னுடைய இந்த புதிய எம்ஜி செலக்ட் ஷோரூம் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் கார் மாடல்கள் சிலவற்றை எம்ஜி நிறுவனம் ஏற்கனவே வெளியீடு செய்துவிட்டது. அந்தவகையில், 4 கார் மாடல்களை அது எம்ஜி செலக்ட் ஷோரூம் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வரும் என தற்போது எதிர்பார்க்கப்படுகின்றது. அவை எவை என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster): இந்தியாவில் எம்ஜி செலக்ட் ஷோரூம் வாயிலாக இந்த காரே முதலில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என நம்பப்படுகின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆகும். இரண்டு டோர்கள் மற்றும் இரண்டு இருக்கைகளை மட்டுமே கொண்ட கார் மாடல் இது என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது.

ஓர் முழு சார்ஜில் இந்த கார் அதிகபட்சமாக 500 கிமீ வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரேஞ்ச் தருவதில் மட்டுமல்ல ஆற்றலை வெளிப்படுத்துவதிலும் இது கைதேர்ந்த கார் மாடலாக இருக்கும் என கூறப்படுகின்றது. 510 பிஎஸ் மற்றும் 725 என்எம் டார்க் ஆற்றலையே இந்த கார் உருவாக்கும்.

மேலும், வெறும் 3.2 செகண்டுகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்றும் கூறப்படுகின்றது. இத்தகைய ஆற்றல் மிக்க கார்களையும் எம்ஜி அதன் எம்ஜி செலக்ட் ஷோரூம் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

மைஃபா 9 (MiFa 9): கியா கார்னிவல் மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் போன்ற கார் மாடல்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிரமாண்ட தோற்றம் கொண்ட ஓர் கார் மாடலே இதுவாகும். உச்சபட்ச பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகளை இந்த காரில் எதிர்பார்க்கலாம்.

இதுவும் ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே ஆகும். இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் எம்பிவி காருக்கு போட்டியாக அமையும். அதற்கு மட்டுமல்ல கியா கார்னிவல் மற்றும் டொயோட்டா வெல்ஃபையருக்கும் இதன் வருகை போட்டியாக அமையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ. 65 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே மைஃபா 9 எலெக்ட்ரிக் எம்பிவி கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. சொகுசு கப்பல்களுக்கு இணையான டிராவல் அனுபவத்தை வழங்கக் கூடிய ஓர் கார் மாடலே இது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், பணக்காரர்களை வெகுவாக இந்த கார் மாடல் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்ஜி4 (MG4): இது ஓர் ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். குட்டியான காரில் அதிகம் பிரீமியம் அம்சங்களை எதிர்பார்ப்போரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கார் மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கும். அதாவது, பார்க்க குட்டியாக இருக்கும் இந்த கார் சொகுசு மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களை மிக தாராளமாகக் கொண்டிருக்கும். 450கிமீ வரை ரேஞ்ச் தரும் லித்தியம் அயன் என்எம்சி வகை பேட்டரியையே இந்த கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்ஜி5 ஸ்டேஷன் வேகன் (MG 5 Station Wagon): நவீன கால சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அம்சங்கள் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருக்கும் ஓர் கார் மாடலாகவே இது காட்சியளிக்கின்றது. இதுவும் ஓர் மின்சார கார் மாடலே ஆகும்.

இதிலும் ஓர் முழு சார்ஜில் 450க்கும் அதிகமான கிமீ ரேஞ்சைப் பெற்றுக் கொள்ள முடியும். இதேபோல், ஆற்றலை வெளிப்படுத்துவதிலும் இந்த கார் மாடல் கைதேர்ந்ததாக இருக்கும் என கூறப்படுகின்றது. அந்தவகையில், 7.7 செகண்டுகளில் இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த இந்த நான்கு கார் மாடல்களே எம்ஜி செலக்ட் ஷோரூம் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மிக முக்கியமாக ஆரம்பத்தில் எம்ஜி செலக்ட் வாயிலாக எலெக்ட்ரிக் கார்களே முதலில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், அதன் முழுமையான திட்ட விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவிலேயே அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் இந்த கார்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அவற்றை விரைவில் இந்தியாவில் நடைபெற இருக்கும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ காட்சிப்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, December 27, 2024, 12:12 [IST]
English summary
Mg select premium showroom to unveil four new vehicles for future launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+