ஒரே ஆளா வந்து 3000 கார்கள வாங்கிட்டு போயிட்டாரு! இந்தியாவில் சீன நிறுவனம் தயாரிக்கும் காருக்கு இத்தன வரவேற்பா!

சீன நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் கார் மாடலை ஒரே ஒரு நிறுவனம் மிக அதிக எண்ணிக்கையில் வாங்கி இருக்கின்றது. அது எந்த நிறுவனம்? என்ன மாதிரியான கார் மாடலை அது தயார் செய்திருக்கின்றது. இதுபற்றி கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

சீன நிறுவனத்திற்கு சொந்தமான இங்கிலாந்து நாட்டு நிறுவனம் எம்ஜி (Morris Garages). இந்த நிறுவனத்தின் தயாரிப்பை (காரை)யே ஒரே ஆளாக வந்து 3 ஆயிரம் யூனிட்டுகளை வாங்கி சென்றிருக்கின்றது ஓர் முன்னணி நிறுவனம். வெர்டிலோ (Vertelo) எனும் நிறுவனம் அந்த அதிக எண்ணிக்கையில் காரை வாங்கிய நிறுவனம் ஆகும்.

Mg vertelo sign mou for 3000 evs

அது வாங்கி இருப்பது அனைத்தும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் ஆகும். ஒவ்வொரு கட்டமாக எம்ஜி எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்ய இருக்கின்றது. வெர்டிலோ ஓர் வாடகை வாகன சேவை நிறுவனம் ஆகும். மின்சார வாகனங்களையே தன்னுடைய வாடகை வாகன சேவையில் அது ஈடுபடுத்தி வருகின்றது.

இந்த நிறுவனம் கிரீன் கிளைமேட் ஃபண்ட் (Green Climate Fund) எனும் நிறுவனத்தின் நிதியால் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே வெர்டிலோ நிறுவனமே சமீபத்தில் டாடா மோட்டார்ஸ்க்கும் மிகப் பெரிய ஆர்டரை வழங்கி இருந்தது. அது டாடா எக்ஸ்பிரஸ்-டி இவி எலெக்ட்ரிக் காருக்கு ஆர்டரை வழங்கி இருந்தது.

2000 யூனிட்டுகளுக்கு அது ஆர்டரை வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே 100 ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்க எம்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களையும் அது ஆர்டர் செய்திருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்த நிறுவனம் இந்தியாவில் கோமெட் இவி (Comet EV) மற்றும் இசட்எஸ் இவி (ZS EV) எனும் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

கோமெட் இவி-யே நிறுவனத்திற்கும், இந்தியாவிற்குமான மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. 17.3 kWh Prismatic Li-ion பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும்.

இதைப் போலவே சூப்பரான ரேஞ்ஜ் திறனை வழங்கும் கார் மாடலாகவே எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் இவி காட்சியளிக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் மாடலில் ஓர் முழு சார்ஜில் 461 கிமீ ரேஞ்ஜைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்கா இசட்எஸ் இவி எலெக்ட்ரிக் கார் மாடலில் 50.3 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, லெவல் 2 வகை அடாஸ் அம்சமும் இந்த எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்தியாவின் சுத்தமான எலெக்ட்ரிக் இன்டர்நெட் வசதிக் கொண்ட எஸ்யூவி காராகவும் இசட்எஸ் இவி காட்சியளிக்கின்றது. இத்தகைய எலெக்ட்ரிக் கார்களுக்கே மிகப் பெரிய எண்ணிக்கையில் எம்ஜி-க்கு ஆர்டரை வழங்கி இருக்கின்றது வெர்டிலோ நிறுவனம்.

நூறு சதவீதம் தன்னுடைய வாகன சேவையை தூய்மையானதாக மாற்றும் பொருட்டே அது முழுவதுமாக எலெக்ட்ரிக் கார்களுக்கு மட்டுமே ஆர்டரைக் கொடுத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. எம்ஜி இசட்எஸ் இவி ஓர் அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காராகும். இது ரூ. 18.98 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், கோமெட் இவி மிக மிக மலிவான விலையில் விற்கப்படுகின்றது. அதன் ஆரம்ப விலையே 6.98 லட்சம் ரூபாய் மட்டுமே ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கே வெர்டிலோ ஆர்டரை வழங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிகப் பெரிய ஆர்டர்களைப் பெறுவது முதல் முறையல்ல. டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் இதுபோன்ற மிகப் பெரிய எண்ணிக்கையிலான வாகனங்களுக்கான ஆர்டர்களை இந்தியாவில் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலே எம்ஜிக்கும் வெர்டிலோ வாயிலாக மிகப் பெரிய ஆர்டர் கிடைத்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 23, 2024, 18:25 [IST]
English summary
Mg signs with vertelo to deliver 3k units electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+