மாருதியை அப்படியே ஃபாலோ பண்றாங்க! டாடாவ வம்புக்கு இழுத்தது போதாதுனு பிஎம்டபிள்யூ-வையும் கடுப்பாக்கபோது எம்ஜி..

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் ஒட்டுமொத்த இந்தியாவையும் வளைத்து போடுவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் செயல்பாட்டை நினைவூட்டும் விதமாக எம்ஜி மோட்டார் நிறுவனம், ஜேஎஸ்டபிள்யூ (JSW) உடன் கூட்டணியைத் தொடங்கியது. அதாவது, இந்திய சந்தையை ஆட்சி செய்யும் நோக்கில் ஜப்பானைச் சேர்ந்த சுஸுகி நிறுவனம் இந்தியாவின் மாருதி உடன் கை கோர்த்ததை போல, சீன நிறுவனத்திற்கு சொந்தமான இங்கிலாந்து நாட்டு நிறுவனம் எம்ஜி மோட்டார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ உடன் கை கோர்த்தது.

இந்த இணைவைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட முதல் கார் மாடலாக விண்ட்ஸர் இவி (Windsor EV) ஆகும். இது ஓர் சியூவி ரக மின்சாரத்தில் இயங்கும் கார் மாடல் ஆகம். இந்த கார் மாடலை மட்டுமல்ல, இன்னும் பல கார் மாடல்களை இந்த கூட்டணி நம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

MG cyberster launch in 2025

இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமே அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியாவில் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு புதிய கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வருவதே ஆகும். இந்த நிலையிலேயே விண்ட்ஸர் இவி-யைத் தொடர்ந்து ஓர் ஸ்போர்ட்ஸ் (Sports) கார் மாடலையும் எம்ஜி விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக கடந்த சில தினங்களாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து தற்போது புதிய தகவலாக எம்ஜி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் அந்த புதுமுக ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகமாக இருக்கும் மாதம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கின்றது. 2025 ஜனவரி மாதத்திலேயே எம்ஜி ஸ்போர்ட்ஸ் விற்பனைக்கு வர இருக்கின்றது. எம்ஜி நிறுவனம் சைபர்ஸ்டர் (Cyberster) எனும் கார் மாடலையே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் கன்வெர்டபிள் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆகும். ஏற்கனவே எம்ஜி நிறுவனம் சமீபத்திய வெளியீடான விண்ட்ஸர் இவி உடன் சேர்த்து கோமெட் இவி (Comet EV), இசட்எஸ் இவி (ZS EV) ஆகிய மின்சார கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே நான்கவதாக சைபர்ஸ்டர் மாடலையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மின்சார காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 3.2 செகண்டுகளே போதும் என கூறப்படுகின்றது.

இத்தகைய ஆற்றலை உருவாக்கக் கூடிய ஸ்போர்ட்ஸ் காரையே எம்ஜி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் வருகை பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் பென்ஸ் நிறுவனங்களின் கன்வெர்டபிள் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களுக்கு போட்டியளிக்கும் விதமாக அமையும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே இதன் விண்ட்ஸர் இவி வருகையால் டாடா நெக்ஸான் இவிக்கு தலைவலியான சூழல் ஏற்பட்டு இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் கூட்டணி ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனங்களையும் வம்புக்கு இழுக்க இருப்பது உறுதியாகி இருக்கின்றது. மிக முக்கியமாக இந்த காரின் விலை மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. 75 லட்ச ரூபாய் தொடங்கி 80 லட்ச ரூபாய் வரையிலான விலையிலேயே இது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என கூறப்படுகின்றது.

இந்த விலையில் கன்வெர்டபிள் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும். இதையே நிறைவேற்ற எம்ஜி சைபர்ஸ்டர் வர இருப்பதாக நம்பப்படுகின்றது. இந்த மின்சார கார் ஓர் முழு சார்ஜில் 507 கிமீ ரேஞ்சை வழங்கும் என்றும், இதில் அதிகபட்சமாக 503 பிஎஸ் மற்றும் 725 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரே இடம் பெற இருக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி சைபர்ஸ்டர் காருக்கு நேரடி போட்டி இல்லை. இந்த காருக்கு என்றால் பிஎம்டபிள்யூ இசட்4 (BMW Z4) மாடல் மட்டுமே ஆகும். இது ஓர் ஐசிஇ வெர்ஷன் ஆகும். ஆனால், இதைவிட மிக மிக குறைவான விலையிலேயே சைபர்ஸ்டர் மின்சார கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, December 2, 2024, 23:14 [IST]
English summary
Mg to launch all electric cyberster convertible in india by january 2025
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+