எம்ஜி நிறுவனத்தின் புதிய கூபே ஸ்டைல் எஸ்யூவி கார் வெளியீடு! விலை என்ன தெரியுமா?
மத்திய கிழக்கு நாடுகளில் தனது தயாரிப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிதாக கூப்பிட ஸ்டைல் எஸ்யூவி கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த காருக்கு வேல் என பெயர் வைத்துள்ளது. எம் ஜி நிறுவனத்தின் இந்த கார் குறித்த அனைத்து விரிவான தகவல்களையும் காணலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளில் தனது கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்நாடுகளில் எம்ஜி நிறுவனத்தின் கார்களுக்கு என தனி மதிப்பு இருக்கிறது. இதனால் எம்ஜி நிறுவனம் அந்நாடுகளில் தனது வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன் ஒருப்படியாக தற்போது வேல் என்ற கூபே வடிவ எஸ்யூவிசி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அந்நாட்டில் உள்ள இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டிசைன் முழுவதும் இளைஞர்களுக்கான லுக்கை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிட்-சைஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது.
எம்ஜி நிறுவனம் இந்த காரின் விலை குறித்த விபரங்களை இதுவரை வெளியிடவில்லை. தற்போது எம்ஜி நிறுவனத்தின் கடைசியாக வந்த கார் 23 ஆயிரத்து 700 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது இதே விலையில் தான் புதிய காரும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டும் ஒரே ரக கார் என்பதால் ஒரே மாதிரியான விலையில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வேல் கூபே எஸ்யூவி ரக காரைப் பொறுத்தவரை அதன் டிசைன் கூபே ரக சில் அவுட்டில் மாடலான தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் பெரிய கிரில் பொருத்தப்பட்டுள்ளது அதில் எல்இடி புரஜெக்டர் ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கிரில் டிசைன் ஓஷன் டெத் டைட்டன் வடிவமைப்பை கொண்டதாக இருக்கிறது.
இந்த காரின் பக்கவாட்டை பொருத்தவரை ஸ்லோப்பான ரூப் லைன் வழங்கப்பட்டுள்ளது. 19 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. ஃபிளாஷ் டோர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டைலான இந்த காரின் முக்கிய டிசைன் வடிவமைப்பாக முன்பக்க வடிவமைப்பு இருக்கிறது. முக்கியமாக இந்த காரில் டூயல் டோன் பெயிண்ட் ஸ்கீம் உள்ளன. இந்த காரின் பின்பக்கம் பேஸிவான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எஸ்யூவி கேரக்டர் மற்றும் பூட் ஸ்பாய்லர் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது.

எல்இடி லைட் கனெக்டெட் லைட்டுக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பம்பர்கள் பியானோ பிளாக் பினிஷில் குரோம் எக்ஸாஸ்ட் டிப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறத்தை பொறுத்தவரை யூத் ஃபுல் வைபாக இருக்கும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. உன் பக்கம் டூயல் கனெக்டெட் ஸ்கிரீன் உள்ளது. மத்தியில் பெரிய சென்டர் கண்சோல் மல்டி லேயர் டேஷ்போர்டு இணைக்கப்பட்டுள்ளது.
இதன் அம்சங்களை பொறுத்தவரை 10.3 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார் பிளே ஆகிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது போக வயர்லெஸ் சார்ஜிங் சென்டர், 256 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 9 ஸ்பீக்கர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், மெமரி அம்சத்துடன் கூடிய பவ்டு டிரைவர் சீட், 360 டிகிரி பார்க்கிங் கேமரா ஆகியவை உள்ளன.
இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர்போக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆக்டிவ் மற்றும் பேஸிவ் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த காரின் உரிமையாளரின் மன அமைதிக்காக பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு ஸ்டாண்டர்டாக 6 ஆண்டுகள் மற்றும் 2 லட்சம் கிலோமீட்டர் வரையிலான வாரண்டியை அந்நிறுவனம் வழங்குகிறது.
முக்கியமாக இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் என்எல்இ டர்போ சார்ஜர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 170 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது இந்த இன்ஜின் சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்கும் இன்ஜினாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் இந்த காரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் தற்போது அறிமுகப்படுத்தியிருந்தாலும் விரைவில் இந்த காரை இந்தியாவிற்கு கொண்டு வர ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த கார் இந்தியாவுக்கு வரும் பட்சத்தில் நிச்சயம் இந்திய மக்களுக்கு பிடித்த காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் வந்தால் நீங்கள் வாங்குவீர்களா என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









