காஸ்ட்லியான கார்ல மட்டுமே இருக்குற விஷயத்தை இந்த கார்லயும் கொண்டு வரப்போறாங்களா?
எம்ஜி நிறுவனம் வரும் 11ம் தேதி விண்ட்ஸர் இவி என்ற தனது புதிய எலெக்ட்ரிக் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்த கார் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த காரில் என்ன வகையான வீல் பொருத்தப்படுகிறது என்ற தகவலை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் எனது அடுத்த காருக்கான அறிமுகத்திற்காக தற்போது தயாராகி வருகிறது. தற்போது நிறுவனம் எம்ஜி விண்ட்ஸர் இவி என்ற காரை செப்டம்பர் 11ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த கார் எம்ஜி நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் காராகவும். ஏற்கனவே இந்நிறுவனம் எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் கோமெட் இவி ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் மூன்றாவது காராக எம்ஜி விண்ட்ஸர் இவி காரை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே சர்வதேச அளவில் வூலிங் பிராண்டில் கிளவுட் இவி என்ற பெயரில் இந்த கார் விற்பனையாகி வரும் நிலையில், இந்த காரை லேசாக மாற்றியமைத்து இந்தியாவில் விண்ட்ஸ்ர் இவி என்ற பெயரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே விற்பனையாகி வரும் இசட்எஸ் இவி மற்றும் கோமெட் இவி ஆகிய கார்களுக்கு மத்தியில் இந்த கார் பொசிஷன் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த கார் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த காரில் அந்நிறுவனம் அலாய் வீல்களை பொருத்த போவதாக தெரிவித்துள்ளது. அதுவும் டாப் வேரியண்டில் 18 இன்ச் கொண்ட அலாய் வீல்கள், டைமண்ட் கட் டிசைனுடன் பொருத்தப்பட திட்டமிட்டுள்ளது. இந்த அலாய் வீல்களில் 215/55 ஆர்18 என்ற அளவிலான டயர்களை பொருத்த திட்டமிட்டுள்ளது.

எம்ஜி என்ற நிறுவனம் இந்த விண்ட்ஸர் இவி காரை அறிமுகப்படுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்த பின்பு பல்வேறு விதமான அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த காரின் சில்லவுட் வடிவமைப்பை காட்டிவிட்டது. இதில் பார்க்கும் போது இந்த கார் அதிக ஏரோ கிளைடிங் டிசைன் அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது நமக்கு தெரிகிறது.
இதுபோக இந்த காரின் உட்புறம் பின்பக்க சீட்டை சுமார் 135 டிகிரி வரை சாய்த்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. விமானங்களில் பிசினஸ் கிளாஸில் உள்ள சீட்டுகள் தான் இப்படியான சாய்வு வசதியை கொண்டதாக இருக்கும். அதனால் இது அதிக சொகுசு அம்சம் கொண்ட காராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மத்தியில் இருக்கிறது.

இதுபோக இந்த காரின் உட்பகுதியில் 15 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்தில் எம்ஜி ஓஎஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இருக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களுக்கு மத்தியில் தான் தற்போது அலாய் வீல் அளவு குறித்த தகவல்கள் உறுதியாகி உள்ளது.
எம்ஜி நிறுவனம் சர்வதேச அளவில் என்ற பிராண்டில் கிளவுட் இவி என்ற காரை தான் இந்தியாவில் விண்ட்ஸர் காராக எடுத்து வருவதால் அந்த காரில் உள்ள பல்வேறு அம்சங்களில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக சர்வதேச அளவில் 2 பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 50.6 கிலோவாட்ஹவர் பேட்டரி ஆப்ஷன் இந்திய மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 460 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும்.
இந்தக் காரில் உள்ள பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜ் செய்வதற்கான அம்சங்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த காரில் உள்ள பேட்டரி விரைவாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை ரேஞ்ச் தான். நீண்ட தூரம் பயணிப்பதற்கு எலெக்ட்ரிக் கார் ஏற்றதாக இல்லை என பலர் பேசி வரும் நிலையில், இந்த சவால்களை சமாளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய வாகன சந்தையில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான மோகம் மெல்ல மெல்ல அதிகரித்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் மெல்ல மெல்ல தங்கள் வாகன தயாரிப்புகளை எலெக்ட்ரிக் வாகனம் நோக்கி நகர தொடங்கியுள்ளார்கள். இதன்படி எம்ஜி நிறுவனம் இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க நிரூபம் முயற்சி செய்து வருகிறது என்பதை தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









