கத்து குட்டிங்ககிட்ட எல்லாம் டாடா அடி வாங்கும்னு யாரு எதிர்பார்த்த.. நல்லவேள ரத்தன் டாடா இதை எல்லாம் பாக்கல!

மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யை போல இந்தியாவை ஆள வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றது எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம். இதன் அடிப்படையிலேயே இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ (JSW) உடன் கை கோர்த்தது. இந்த இணைவிற்கு பின்னரே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் கார் மாடலே விண்ட்ஸர் இவி (Windsor EV). இது ஓர் சியூவி (CUV) ரக எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல் ஆகும்.

இந்த கார் மாடலிடமே டாடாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலான நெக்ஸான் இவி (Tata Nexon EV) மிகப் பெரிய அடியை வாங்கி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த நிறுவனத்தின் தயாரிப்பும் டாடா நெக்ஸான் இவி-யை வீழ்த்தாதநிலையில், எம்ஜி விண்ட்ஸர் இவி முதல் முறையாக விற்பனையில் வீழ்த்தி இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் விற்பனையாகும் மின்சார கார் என்கிற மகுடத்தைச் சூடியிருக்கின்றது.

Mg windsor ev best selling electric car

இது டாடா நெக்ஸான் இவிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அடியாகும். எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விண்ட்ஸர் இவி உடன் சேர்த்து மேலும் இரண்டு கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. கோமெட் இவி (Comet EV) மற்றும் இசட்எஸ் இவி (ZS EV) ஆகியவையே அவை ஆகும்.

இந்த மூன்று எலெக்ட்ரிக் கார் மாடல்களில் மிகவும் குறைவான விலைக் கொண்ட தயாரிப்பாக கோமெட் இவி இருக்கின்றது. இதைவிட அதிக எண்ணிக்கையிலேயே விண்ட்ஸர் இவி விற்பனையாகி இருக்கின்றது. இதற்கு 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery as a service) திட்டத்தின்கீழ் இந்த காரை மிகவும் குறைவான விலையில் எம்ஜி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பதே முக்கிய காரணம் ஆகும்.

ரூ. 9.99 லட்சத்திற்கே இந்த திட்டத்தின்கீழ் விண்ட்ஸர் இவியை வாங்கிக் கொள்ள முடியும். ஆனால், பேட்டரிக்கு உரிமம் கொண்டாட முடியாது. ஆகையால், ஒவ்வொரு கிமீ பயணத்திற்கு 3 ரூபாய் 50 காசுகளை நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். அதேவேளையில், பேட்டரியுடன் இந்த காரை வாங்க வேண்டும் எனில் ரூ. 3.50 லட்சம் கூடுதலாக வழங்க வேண்டும்.

அதாவது, பேட்டரியுடன் ரூ. 13.50 லட்சத்திற்கே இந்த கார் விற்கப்படுகின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கம் முதல் சியூவி ரக கார் மாடலே விண்ட்ஸர் இவி ஆகும். இந்த கார் ஒற்றை பேட்டரி பேக் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஓர் முழு சார்ஜில் இந்த காரில் 331 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதற்காக 38 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மின்சார மோட்டாரை பொருத்த வரை விண்ட்ஸர் இவி காரில் 134 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. எம்ஜி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை மட்டுமல்ல தன்னுடைய மற்ற தயாரிப்புகளையும் பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தின்கீழ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வரும் நாட்களிலும் விண்ட்ஸர் இவியே அதிகம் விற்பனையாகும் மின்சார காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த காருக்கு கிடைத்த புக்கிங் விபரம் உள்ளது. இந்த காருக்கு புக்கிங் பணிகள் தொடங்கிய முதல் 24 மணி நேரங்களிலேயே 15,176 யூனிட்டுகளுக்கான புக்கிங்கைக் குவித்தது. இதற்கு அதன் மலிவு விலையே முக்கிய காரணம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 16, 2024, 5:00 [IST]
English summary
Mg windsor ev achieves top sales in october 2024 overtaking tata nexon ev in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+