ஜாலியா மனைவி குழந்தைகளுடன் படுத்துட்டே டிராவல் பண்ணலாம்! எம்ஜி-ன் புதிய இவி காரில் இப்படி ஒரு வசதி இருக்குதா?

எம்ஜி நிறுவனம் புதிய விண்ட்ஸர் என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த காரை பல்வேறு இடங்களில் நிறுவனம் சோதனை செய்து வரும் நிலையில் இந்த காரில் அதிகமான பிராக்டிகல் அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்ததாக உருவாக்கியுள்ளதாக நமக்கு தகவல் வெளியாகி உள்ளது. இதில் பல சொகுசு கார்களிலேயே இல்லாத குறிப்பிட்ட அம்சம் இருப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

தற்போது புதிய மிட்-சைஸ் என்ற விண்ட்ஸர் இவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த காரை இந்நிறுவனம் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகிறது. இந்த கார் செடான் மற்றும் எஸ்யூவி ரக காரின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரை சியூவி கார் என அழைக்கிறார்கள். செடான் மற்றும் எஸ்யூவி ஆகிய இரண்டு விதமான ஸ்டைல் இந்த காரில் ஒரு புகுத்தப்பட்டுள்ளது.

MG Windsor EV

இந்த விண்ட்ஸர் கார் ஒரு எலெக்ட்ரிக் கார் என்பதால் இது மாசு ஏற்படுத்தாத காராக இருக்கிறது. இந்நிறுவனம் இந்த காரை கோமெட் இவிக்கு சற்று மேலாகவும் இசட்எஸ் இவிக்கு சற்று கீழாகவும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. சர்வதேச அளவில் யூலிங் நிறுவனம் கிளவுட் இவி என்ற காரை விற்பனை செய்து வருகிறது. கிட்டத்தட்ட அந்த காரை தான் இந்தியாவில் மாற்றியமைத்து விண்ட்ஸர் என்ற பெயரில் இந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த காரின் வடிவமைப்பை பெரும்பாலும் கிளவுட் இவி கார் போலவே வடிவமைத்துள்ளது. பேட்ஜ் பகுதியில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரை முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் மூலம் குறைந்த விலையில் இந்த காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்ய முடியும் என்ற எண்ணத்தில் இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளது.

இந்த காரில் ஒரு முக்கியமான அம்சம் இடம் பெற்றிருப்பது தற்போது வெளியாகியுள்ள டீசர் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது. இந்த காரில் ஏரோ லாஞ்ச் சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சீட்டுகள் 135 டிகிரி வரை சாய்வு வழங்கும் சீட்டுகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இது சிட்டி பகுதியில் டிரிப் செல்ல வேண்டுமென்றாலும் சரி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்றாலும் சரி, பயணிகளுக்கு சொகுசு வசதியை வழங்கும் சீட்டாக இருக்கிறது.

பொதுவாக கார்களில் முன்பக்க சீட்டுகளில் தான் சாய்வு வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். பின்பக்க சீட்டுகளில் பெரிய அளவில் சாய்வு வசதிகள் இருக்காது. ஒரு சில கார்களில் இருந்தாலும், அதிகமாக சாய்க்க முடியாது. பின்னால் இருக்கும் பூட் வசதியை இது பாதிக்கும் என்பதால், சொகுசு வசதியை பிரதானமாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த விண்ட்ஸர் காரின் பின்பக்க சீட் சுமார் 135 டிகிரி வரை சாய்வாக இருக்கும்.

இதனால் பின்பக்க சீட்டில் அமர்வார்கள் இந்த காரில் கிட்டத்தட்ட படுத்துக்கொண்டே பயணம் செய்யலாம் என்ற அளவில் இந்த சீட்டை சாய்த்துக் கொள்ளலாம். இது வயதானவர்கள் முதல் குழந்தைகளுடன் பயணிப்பவர்கள் வரை அது பலருக்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் உட்புறம் முழுவதும் அதிக வசதி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

எம்ஜி நிறுவனம் இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருக்கும் படி உருவாக்கி உள்ளது. இதனால் பள்ள மேடுகள், ஸ்பீடு பிரேக்கர்கள், தரம் இல்லாத சாலைகளில் கூட இந்த கார் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஸ்மூத்தாக பயணம் செய்ய முடியும். இந்த காரின் முன்பக்கம் எல்இடி ஹெட்லைட்டுகள், இலுமினேட் செய்யக் கூடிய லோகோ , எல்இடி டிஆர்எல்கள் மற்றும் அதை கனெக்ட் செய்யக்கூடிய லைட் பார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரில் 37.9 கிலோ வாட் ஹவர் மற்றும் 50.6 கிலோ வாட் ஹவர் என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. இதன் மூலம் இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 460 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்தியாவிலும் இந்த கார் வரும்போது இப்படியான ரேஞ்ச் தரும் காராகவே வரும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பாா்க் கருத்து: இந்திய மக்கள் மத்தியில் தற்போது கார்களில் அதிகமான சொகுசு வசதி தேவை என்ற விருப்பம் பலருக்கு இருக்கிறது. முக்கியமாக வயதானவர்கள் பெண்கள் குழந்தைகள் என நீண்ட தூரம் பயணிக்கும் போது அவர்கள் காரிலேயே படுத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய தேவை இருப்பதை புரிந்து கொண்ட இந்நிறுவனம் இப்படியான ஒரு வசதியை தங்கள் காரில் வழங்கி உள்ளது

More from DriveSpark

Article Published On: Saturday, August 10, 2024, 12:00 [IST]
English summary
Mg windsor ev aero lounge rear seats 135 degree recline
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+