இன்டர்நெட் டிராஃபிக் ஆகாம இருந்தா சரி.. நாளைல இருந்துதான் இந்த காருக்கு புக்கிங் தொடங்குது! உறுதியான தகவல்!

இந்தியாவில் எம்ஜி (MG Motor) நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ (JSW) உடன் கூட்டணியைத் தொடங்கியது. இந்த இணைவை அடுத்து இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஓர் புதிய வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தன. இதன் தொடர்ச்சியாக சமீபத்தி ஜேஎஸ்டபிள்யூ - எம்ஜி கூட்டணி, நாட்டில் விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தின. இது ஓர் சியூவி (Intelligent CUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் முதல் சியூவி ரக கார் மாடல் இதுவே ஆகும். இட வசதியில் எம்பிவி மற்றும் எஸ்யூவி ரக கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த கார் மாடல் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய கார் மாடலுக்கே விரைவில் புக்கிங் பணிகள் தொடங்க இருக்கின்றன.

Mg windsor bookings open from tomorrow

இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இந்த கார் மாடலுக்கு நாளையே புக்கிங் பணிகள் தொடங்க இருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, அக்டோபர் 3, காலை 7 மணி 30 ஆவது நிமிடத்தில் இருந்து விண்ட்ஸர் இவி காருக்கான புக்கிங் பணிகள் தொடங்க இருக்கின்றன.

அருகில் உள்ள எம்ஜி நிறுவனத்தின் ஷோரூம் அல்லது ஆன்லைன் வாயிலாக காருக்கான புக்கிங்கை செய்துக் கொள்ள முடியும். ரூ. 11 ஆயிரம் முன்தொகையிலேயே புக்கிங்குகள் ஏற்கப்பட இருக்கின்றன. ஆகையால், அப்போது இன்டர்நெட் டிராஃபிக்கால் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரை, செடான் மற்றும் எஸ்யூவி ரக கார்களுக்கு இணையான கம்ஃபோர்ட்டான டிராவல் அனுபவத்தை வழங்கும் வகையில் தயார் செய்திருப்பதாக எம்ஜி தெரிவித்திருக்கின்றது.

அதேவேளையில், மிகக் குறைவான விலையிலும் இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும். ரூ. 9.99 லட்சம் எனும் விலையில் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த விலையில் வாங்கும்போது பேட்டரி பேக்கிற்கு உரிமைக் கொண்டாட முடியாது. ஆகையால், பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டணத்தை நாம் ஜேஎஸ்டபிள்யூ - எம்ஜி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியிருக்கும் ஒரு கிமீட்டருக்கு ரூ. 3.5 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த திட்டத்தை நிறுவனம் பேட்டரி அஸ் எ சர்வீஸ் என பெயர் சூட்டியிருக்கின்றது. கிட்டத்தட்ட பேட்டரியை மட்டும் வாடகைக்கு எடுக்கும் ஓர் செயல்முறையே இதுவாகும். அதேவேளையில், பேட்டரியுடனும் விண்ட்ஸர் இவி-யை வாங்கிக் கொள்ள முடியும். அதற்கு ரூ. 13.49 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது ஆரம்ப நிலை தேர்வான எக்சைடு-வின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதுதவிர, இந்த கார் மாடல் எக்ஸ்க்ளூசீவ் மற்றும் எஸ்சென்ஸ் என்கிற தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் எக்ஸ்க்ளூசீவ்-க்கு ரூ. 14.49 லட்சமும், எஸ்சென்ஸ்-க்கு ரூ. 15.49 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த இரண்டு தேர்வுகளையும் பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தின்கீழ் வாங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தின்கீழ் வாங்கும்போது அதே ரூ. 3.50 லட்சம் வரை பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதேநேரத்தில் ஒரு கிமீ பயன்பாட்டிற்கு ரூ. 3.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சார்ஜ் செய்வதற்கான தொகையையும் நாமே செலுத்த வேண்டும். அதேவேளையில், முதல் ஓராண்டிற்கு இலவசமாக இந்த காரை சார்ஜ் செய்துக் கொள்ளும் சிறப்பு சலுகையையும் எம்ஜி அறிவித்திருக்கின்றது. எம்ஜி விண்ட்ஸர் இவி 38 kWh திறன் கொண்ட ஒற்றை பேட்டரி பேக் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

இது ஓர் ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரி பேக் ஆகும். மழை, தூசி போன்றவற்றால் எந்தவொரு பாதிப்பையும் அது சந்திக்காது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 332 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது அராய் சான்று பெற்ற ரேஞ்ச் திறன் ஆகும். இத்துடன், 100KW (136 பிஎஸ்) பவர் மற்றும் 200 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி விண்ட்ஸர் இவிக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரை இப்போது புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற 12 ஆம் தேதி முதல் டெலிவரி கொடுக்க இருப்பதாக எம்ஜி தெரிவித்திருக்கின்றது. எனவே சீக்கிரமே விண்ட்ஸர் இவி-யை சாலையில் பார்க்க முடியும் என தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 2, 2024, 5:00 [IST]
English summary
Mg windsor ev bookings open from tomorrow at 7 30 am booking amount inr 11000
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+