காரை பார்த்தால் பயங்கர ஸ்டைலா இருக்கு... விலை இவ்வளவுதானா? சிட்டியில் ஓட்ட எப்படி இருக்கு?

எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV), இந்திய மார்க்கெட்டில் புதியதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலக்ட்ரிக் கார். இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 3வது எலக்ட்ரிக் கார். எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில், பேட்டரி வாடகை திட்டத்துடன் (BaaS) விண்ட்சர் இவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சார்ஜ் காலியான பழைய பேட்டரியை கொடுத்து கட்டணத்தை செலுத்தி புதிய பேட்டரியை இந்த எலக்ட்ரிக் காரில் பெற்றுக் கொள்ளலாம். ஒரு கிமீ பயணத்திற்கு ரூ.3.5 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

அதேநேரம், மற்ற எலக்ட்ரிக் கார்களை போன்று பேட்டரி உடனும் எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை வாங்கலாம். இத்தகைய எலக்ட்ரிக் காரை நேரில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. அப்போது நாங்கள் காரை பற்றி வழங்கிய விமர்சனங்களை வீடியோவாக தொகுத்து வழங்கியுள்ளோம். அதனை கீழே காணலாம்.

Baas திட்டத்துடன் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் விலை ரூ.9.99 லட்சமாகவும், பேட்டரி உடன் ரூ.13.49 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தோற்றத்தை பொறுத்தவரையில், விண்ட்சர் இவி பார்ப்பதற்கு கிட்டத்தட்ட எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் காரை போன்று உள்ளது. ஆனால், கோமெட் இவி காரை காட்டிலும் விண்ட்சர் இவி ஆனது அளவில் பெரியதாகும்.

mg windsor ev review video

இந்த எலக்ட்ரிக் காரில் 38kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இது காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாருக்கு இயக்க ஆற்றலை வழங்குகிறது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 331கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என 3 விதமான டிரைவிங் மோட்கள் இந்த எலக்ட்ரிக் காரில் கிடைக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, September 23, 2024, 12:08 [IST]
English summary
Mg windsor ev car review video check all details here
மேலும்... #mg motor #MG Windsor EV #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+