விமானம் போலிருக்கும் இந்த கார இத்தன கலர் ஆப்ஷன்ல வாங்கலாமா? உங்களுக்கு பிடிச்ச கலர் இதுல இருக்கானு பாத்திருங்க

ஜேஎஸ்டபிள்யூ-எம்ஜி (JSW-MG) நிறுவனமும் இணைந்து இந்தியாவில் விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. இது ஓர் சியூவி (CUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதுவே இந்தியாவின் முதல் சியூவி ரக கார் மாடல்கூட. இந்த பிரிவில் ஒரு கார் மாடல்கூட நாட்டில் விற்பனையில் இல்லாத நிலை நிலவி வந்தது. இந்த நிலையிலேயே எம்ஜி இந்த விண்ட்ஸர் இவி வாயிலாக அந்த குறையை எம்ஜி போக்கி இருக்கின்றது.

இந்த காருக்கு மிகவும் குறைவான விலையையே எம்ஜி நிர்ணயம் செய்திருக்கின்றது. ரூ. 9.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், இப்போதைய நிலவரப்படி நிறுவனம் விண்ட்ஸர் இவி கார் மாடலின் ஆரம்ப விலையை மட்டுமே அறிவித்து உள்ளது.

Mg windsor ev colour

விரைவில் அனைத்து வேரியண்டுகளின் விலையையும் அது அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்ப விலையை போலவே இந்த கார் மாடலை என்னென்ன நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்கிற விபரங்களையும் அது வெளியிட்டு இருக்கின்றது. இதுபற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

எம்ஜி விண்ட்ஸர் இவி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. எக்சைடு (Excite), எக்ஸ்க்ளூசீவ் (Exclusive) மற்றும் எஸ்சென்ஸ் (Essence) ஆகியவையே அவை ஆகும். வண்ணங்களை பொருத்த வரை இந்த கார் நான்கு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

பெர்ல் ஒயிட் (Pearl White), ஸ்டார்பர்ஸ்ட் பிளாக் (Starburst Black), க்ளே பீஜ் (Clay Beige) மற்றும் டர்கிஸ் கிரீன் (Turquoise Green) ஆகியவையே அவை ஆகும். இந்த தேர்வுகளை எல்லா வேரியண்டுகளிலும் பெற்றுவிட முடியாது. ஒரு சில நிற தேர்வுகள் குறிப்பிட்ட வேரியண்டுகளில் மட்டுமே வழங்கப்படும் என எம்ஜி தெரிவித்திருக்கின்றது.

அந்தவகையில், உயர்நிலை தேர்வான எஸ்சென்ஸ்-இல் அனைத்து விதமான நிற தேர்வுகளும் வழங்கப்படும் என்றும், ஆரம்ப நிலை தேர்வான எக்சைடை ஒரே ஒரு நிற தேர்விலும் அது விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. பெர்ல் ஒயிட் எனும் ஒற்றை நிற தேர்வில் மட்டுமே எக்சைடு விற்பனைக்குக் கிடைக்கும்.

நடுநிலை தேர்வான எக்ஸ்க்ளூசீவ்-இல் பெர்ல் ஒயிட் மற்றும் ஸ்டார்பர்ஸ் பிளாக் ஆகியவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கிளே பீஜ் மற்றும் டர்கிஸ் கிரீன் ஆகியவை பிரத்யேக நிறம் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதனால்தான் இந்த இரண்டும் உயர்நிலை தேர்வில் மட்டுமே வழங்கப்படுகின்றது.

எம்ஜி நிறுவனம் இந்த விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காரை பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் (Battery-as-a-Service) எனும் திட்டத்தின்கீழ் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அதாவது, காரை மட்டும் குறைவான விலையில் விற்பனைச் செய்து அதற்கான பேட்டரியை அவர்களே வாடகைக்கு வழங்குவதுதான் இந்த திட்டம் ஆகும். இதன்படி பேட்டரியை பயன்படுத்த ஒரு கிமீ தூரத்திற்கு ரூ. 3.5 கட்டணமாக வசூலிக்கவும் ஜேஎஸ்டபிள்யூ-எம்ஜி நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

இந்தியாவில் இந்த திட்டத்தின்கீழ் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தநிலையில், முதல் கார் மாடலாக எம்ஜி விண்ட்ஸர் இவியும் பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ்-இன்கீழ் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், இதில் ஏகப்பட்ட சிறப்பம்சங்களையும் எம்ஜி நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்ட் சிஸ்டம், 8.8 அங்குல டிஜிட்டல் டிரைவர்களுக்கான திரை, ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஏசி, பின்னிருக்கைக்கான ஏசி துவாரங்கள், பவர்டு டிரைவர் இருக்கை, எலெக்ட்ரானிக் டெயில்கேட் உள்ளிட்ட அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, விமானத்தின் முகப்பு பகுதியை பிரதிபலிக்கும் முன் பக்கத்தைக் கொண்ட இந்த காரில் விமானங்களுக்கு இணையான ரெக்லைனர் வகை இருக்கையே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் பின்னிருக்கையை 135 டிகிரிக்கு சாய்த்துக் கொள்ள முடியும். ஆகையால், இந்த காரில் அதிக லக்கேஜ்களையும் ஏற்றிச் செல்ல முடியும்.

இந்த காரில் எம்ஜி நிறுவனம் 38 kWh பேட்டரி பேக்கையே வழங்கி இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 331 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இத்துடன், இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு எம்ஜி நிறுவனம் ஓராண்டு விண்ட்ஸர் இவி-யை பொது சார்ஜிங் மையத்தில் இலவசமாக சார்ஜ் செய்துக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த டிமாண்டை தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளும் பொருட்டே விண்ட்ஸர் இவி-யை எம்ஜி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது நிறுவனத்தின் இந்தியாவிற்கான மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 17, 2024, 5:00 [IST]
English summary
Mg windsor ev colour options for each variant explained
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+