3 செல்போன நிக்க வச்சது போல இருக்கு.. இவ்ளோ பெரிய திரையை இந்த பிரமாண்ட தோற்றம் கொண்ட கார் பெற போகுதா!

ஒட்டுமொத்த மின்சார கார் பிரியர்களின் எதிர்பார்ப்பாக எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV) எலெக்ட்ரிக் காரின் வருகை மாறி இருக்கின்றது என கூறலாம். ஏனெனில், அந்த அளவிற்கு ஓர் தனித்துவமான வாகனமாகவே இந்த விண்ட்ஸர் இவி-யை எம்ஜி நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இந்த காரின் ரகமே முதலில் நம்மை ஈர்க்கக் கூடியதாக இருக்கின்றது. பார்க்க எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்களின் கலவையாக காட்சியளிக்கும் இந்த வாகனம், எஸ்யூவி வகை வாகனமோ அல்லது எம்பிவி ரக வாகனமோ இல்லை. அது ஓர் சியூவி (Crossover Utility Vehicle) ரக கார் மாடல் ஆகும்.

இந்தியாவில் இந்த பிரிவில் ஒரு கார் மாடல்கூட விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காலியிடத்தை நிரப்பும் பொருட்டே எம்ஜி நிறுவனம் விண்ட்ஸர் இவி-யை தயார் செய்திருக்கின்றது. இதுவே பலரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய முக்கிய தகவலாகவும் அமைந்துள்ளது. இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்களும் அந்த காரின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையிலேயே இருக்கின்றது.

MG windsor ev dashboard teased

அட்வான்ஸ்டு தொழில்நுட்பம் தொடங்கி மற்ற கார்களில் இல்லாத வசதிகள் பலவற்றை இந்த கார் பெற்றிருப்பதாகத் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கேற்ப காரில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை டீசர் படங்கள் வாயிலாக எம்ஜி நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.

அந்தவகையில், புதிதாக விண்ட்ஸர் இவியில் இடம் பெற இருக்கும் டேஷ்போர்டு (Dashboard) டீசர் படத்தை நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. இந்த டீசர் படத்தின் வாயிலாக பெரிய தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முக்கிய கன்ட்ரோல்களைக் கொண்ட ஸ்டியரிங் வீல், அழகிய ஏசி துவாரங்கள், டிரைவருக்கான டிஜிட்டல் திரை, கப் ஹோல்டர்கள் ஆகியவை விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

விண்ட்ஸர் இவி-யில் இடம் பெற இருப்பது 15.6 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகும். இதேபோல், டிரைவருக்கான திரை 8.8 அங்குலம் கொண்டதாக இருக்கும். இதில், நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான். எம்ஜி-யின் மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் மிகப் பெரிய அளவிலேயே விண்ட்ஸர் இவியில் வழங்கப்பட இருக்கின்றது.

மேலும், இது ஓர் எச்டி வகை திரை என்றும் கூறப்படுகின்றது. இதுதவிர, அட்வான்ஸ்டு வசதிகள் பலவற்றை இந்த திரை தாங்கியிருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி, நேவிகேஷன் என ஏகப்பட்ட சிறப்புகளை இது தாங்கியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர, இந்த காரில் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா வழங்கப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதன் வாயிலாக பிளைண்ட் ஸ்பாட்டுகளைகூட எளிதில் காண முடியும். பாதுகாப்பான பயணத்திற்கு பெரும் உதவியாக இது இருக்கும். இதுமட்டுமில்லைங்க, பெரிய பனோரமிக் சன்ரூஃப், விமானங்களில் காணப்படக் கூடிய ரெக்லைனர் வகை இருக்கைகூட விண்ட்ஸர் இவி-யில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

மேலும், ப்ளஷ் வகை டோர் ஹேண்டில்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பன்முக வண்ணங்களில் ஒளிரும் வசதிக் கொண்ட ஆம்பியன்ட் லைட், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பவர் டெயில்கேட் போன்ற இன்னும் பல சிறப்பு அம்சங்களை புதிய விண்ட்ஸர் இவி-யில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.

இந்த விண்ட்ஸர் இவி, இந்தியாவிற்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், இது இந்தோனேசியா போன்ற உலக சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்றது. உல்லிங் கிளவுட் இவி எனும் பெயரிலேயே இந்த கார் இந்தோனேசியா சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளிலேயே அது அங்கு விற்பனையில் இருக்கின்றது.

இந்தியாவிலும் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களிலேயே விண்ட்ஸர் இவி எதிர்பார்க்கப்படுகின்றது. எம்ஜி நிறுவனம் இந்த புதுமுக காரை வருகின்ற செப்டம்பர் 11 ஆம் தேதி அன்றே அறிமுகம் செய்து வைக்க இருக்கின்றது. அன்றைய தினமே இந்த காரின் விலைகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர, புக்கிங் பணிகளும் அன்றைய நாளில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவேதான் இதன் அறிமுக நாளை எதிர்நோக்கி இந்திய வாகன ஆர்வலர்கள் காத்திருக்கத் தொடங்கி இருக்கின்றனர். அதேநேரத்தில், இப்போதே இந்த காரின் வருகையை முன்னிட்டு எம்ஜி கார் விற்பனையாளர்கள் சிலர் அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்கைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விண்ட்ஸர் இவி விற்பனைக்கு வரும் எனில் நாட்டில் எஸ்யூவி ரக கார்களின் விற்பனையில் லேசாக சுணக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எஸ்யூவி கார்களுக்கு சவால்விடும் வகையில் அதிக இட வசதியையும், அதிக லக்கேஜ்களை ஏற்றிச் செல்லும் வசதியும் சியூவி வகை கார்களில் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 28, 2024, 10:46 [IST]
English summary
Mg windsor ev cuv e car to get 15 6 inch touchscreen dashboard revealed
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+