ரூ.10 லட்சத்தில் இவ்வளவு பெரிய எலக்ட்ரிக் காரா? சீனாவுக்கு இணையாக மாறும் இந்தியா... புக்கிங் எப்போது துவக்கம்?

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி (Windsor EV)-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் குறைந்த விலையில் புதியதொரு எலக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எம்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகள் வருகிற அக்டோபர் 3ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளன. அதனை தொடர்ந்து புக் செய்தவர்களுக்கு கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் அக்.12ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் காரின் முக்கியமான 5 அம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெளிப்புற தோற்றம்: ஸ்டார்பர்ஸ்ட் கருப்பு, பேர்ல் வெள்ளை, களிமண்ணின் பழுப்பு மற்றும் டர்க்குவைஸ் க்ரீன் என மொத்தம் 4 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் எம்ஜி விண்ட்சர் இவி விற்பனை செய்யப்பட உள்ளது. தோற்றத்தில் இது ஒரு எம்பிவி ரக கார் ஆகும். ஆனால், 5 பேர் மட்டுமே இந்த காரில் சவுகரியமாக பயணிக்க முடியும் என எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது.

mg windsor ev top things

காருக்கு முன் மற்றும் பின்பக்கத்தில் ஹெட்லைட்களை இணைக்கும் விதத்தில் எல்இடி லைட் பார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்க ஹெட்லைட்கள் பம்பரில் பொருத்தப்பட்டுள்ளன. கதவு கைப்பிடிகள் பறித்து இழுக்கக்கூடியவைகளாக உள்ளன. ஜன்னல் கண்ணாடிகளை சுற்றிலும் க்ரோம் ஹைலைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எலக்ட்ரிக் காரில் 5-ஸ்போக் டிசைனில் 18-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உட்புற வசதிகள்: காரின் உட்பக்க கேபின் கருப்பு நிறத்தில், காப்பர் நிற ஃபினிஷிங்கை கொண்டுள்ளது. டேஸ்போர்டில் 15.6-இன்ச்சில் பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதனுடன், 8.8 இன்ச்சில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முழுவதுமாக மடக்கக்கூடிய முதுகு தலையணை உடன் முன் இருக்கைகள் மற்றும் கப் ஹோல்டர் உடன் ஃப்ளோட்டிங் செண்டர் கன்சோல் உள்ளிட்டவையும் இந்த காரினுள் இடம்பெற்றுள்ளன. காரினுள் வெப்பநிலையை கண்ட்ரோல் செய்வதற்கு பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

mg windsor ev top things

தொழிற்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதிகள்: தொழிற்நுட்ப அம்சங்களாக ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேக்கு வயர்லெஸ் கனெக்ட்டிவிட்டி, பின் இருக்கை பயணிகளுக்கு தனியாக ஏசி வெண்ட்ஸ், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், பவர்டு டிரைவர் இருக்கை, 9-ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை எம்ஜி விண்ட்சர் இவி காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் 360-டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் எக்ஸ்சைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எஸ்ஸென்ஸ் என 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

mg windsor ev top things

பேட்டரி: பிரிஸ்மேட்டிக் செல்கள் உடன் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் 38kWh லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 331கிமீ தொலைவிற்கு காரை ஓட்டிச் செல்லலாம். விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக பெறக்கூடிய இயக்க ஆற்றல் 136 எச்பி மற்றும் 200 என்.எம் டார்க் திறன் ஆகும்.

ஈக்கோ+, ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் 4 விதமான டிரைவிங் மோட்களை இந்த காரில் பெறலாம். இந்த காருடன் கொடுக்கப்பட உள்ள 45 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரின் மூலமாக வெறும் 55 நிமிடங்களில் 0-இல் இருந்து 80% சார்ஜை நிரப்பிவிட முடியும் என எம்ஜி தெரிவித்துள்ளது. இது இல்லாமல், 3.3 கிலோவாட்ஸ் அல்லது 7.7 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜர் உடனும் விண்ட்சர் இவி காரை வாங்கலாம்.

mg windsor ev top things

சர்வீஸாக பேட்டரி (Baas): விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் பேட்டரியை சேவையாகவும் வழங்க எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. அதாவது, காருக்கான பேட்டரியை கஸ்டமர்கள் வாடகைக்கு பெறலாம். வாடகை பேட்டரியில் ஒவ்வொரு கிமீ பயணத்திற்கும் ரூ.3.5 வழங்க வேண்டியிருக்கும் என எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. பேட்டரி இல்லாமல் காரை வாங்கினால், காரின் விலை இன்னும் குறைவாக நிர்ணயிக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி மோட்டார் நிறுவனம் ஏற்கனவே அதன் கோமெட் இவி எலக்ட்ரிக் கார் மூலமாக இந்திய எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. தற்போது விண்ட்சர் இவி என்கிற புதிய எலக்ட்ரிக் காரை கொண்டுவந்துள்ளது. இதுவும் சீனாவில் விற்பனையில் உள்ள எலக்ட்ரிக் காரின் காப்பி தான். இருப்பினும், விண்ட்சர் இவி காரின் குறைவான விலை மற்றும் சர்வீஸாக பேட்டரி ஆப்ஷன் உள்ளிட்டவை கவனிக்கத்தக்க அம்சங்களாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 11, 2024, 21:19 [IST]
English summary
Mg windsor ev electric car top things to know
மேலும்... #mg motor #MG Windsor EV #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X