எஸ்யூவி காரைபோல அதிக இட வசதி கொண்ட காரின் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு!.. இதோட விலை இவ்ளோ கம்மியா!
எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV) எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு இந்த காரின் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கி இருக்கின்றன. விண்ட்ஸர் இவி ஓர் இன்டலிஜென்ட் சியூவி (Intelligent CUV) ரக எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் முதல் சியூவி ரக கார் மாடல் இதுவே ஆகும். இந்த காரின் டெலிவரி பணிகளையே எம்ஜி மோட்டார் தற்போது தொடங்கி இருக்கின்றது.
இந்தியாவில் எந்தவொரு எலெக்ட்ரிக் காருக்கும் கிடைக்காத ஓர் வரவேற்பு விண்ட்ஸர் இவி-க்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் இந்த காருக்கு முதல் நாளில் கிடைத்த புக்கிங் நிலவரம் பற்றிய விபரம் வெளியாகியது. விண்ட்ஸர் இவி-க்கு புக்கிங் தொடங்கிய முதல் நாளிலேயே 15 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங் அந்த காருக்குக் கிடைத்தது.

இதுவரை நாட்டில் எந்தவொரு எலெக்ட்ரிக் காருக்கும் இந்த அளவு அதிக புக்கிங் முதல் நாளில் கிடைத்ததில் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த புக்கிங் நிலவரத்தை வைத்து பார்க்கையில் வெகு விரைவில் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலகெட்ரிக் கார் மாடலாக விண்ட்ஸர் இவி மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக டாடா நெக்ஸானே இருக்கின்றது. ரூ. 12.49 லட்சம் என்கிற தொடக்க விலையில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், எம்ஜி விண்ட்ஸர் இவி-யை ரூ. 9.99 லட்சத்திற்கே வாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால், இந்த விலையில் வாங்கும் போது விண்ட்ஸர் இவி-யில் வழங்கப்படும் பேட்டரி சொந்தம் கொண்டாட முடியாது. தொடர்ந்து, ஒவ்வொரு ஒரு கிமீ பயணத்திற்கும் 3 ரூபாய் 50 காசுகளை நிறுவனத்திற்கு கட்டணமாகவும் செலுத்த வேண்டியிருக்கும். இத்துடன், பேட்டரியையும் நாமே சார்ஜ் செய்துக் கொள்ளவும் வேண்டாம்.
இந்த திட்டத்திற்கு எம்ஜி நிறுவனம் 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' என பெயர் சூட்டியிருக்கின்றது. அதேநேரத்தில் விண்ட்ஸர் இவி-யை பேட்டரி பேக்குடனும் வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு வாங்க வேண்டும் என்றால் ரூ. 3.5 லட்சம் கூடுதலாக காருக்கு செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தகுந்தது.
விலை குறைவாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பதாலும், எஸ்யூவி கார்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இட வசதியை இந்த சியூவி ரக எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும் என்கிற காரணத்தினாலேயே விண்ட்ஸர் இவிக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதற்கு சான்றாகவே 15,176 புக்கிங் முதல் நாளான ஒரே நாளில் அது குவித்தது.
அடுத்து வரும் நாட்களிலும் இதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் விண்ட்ஸர் இவி மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. எக்சைட் (Excite), எக்ஸ்க்ளூசிவ் (Exclusive) மற்றும் எஸ்சென்ஸ் (Essence) ஆகியவையே அவை ஆகும். இந்த மூன்றிலும் ஒரே மாதிரியான பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
38 kWh லித்தியன் அயன் பேட்டரி பேக்கே விண்ட்ஸர் இவியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 332 கிமீ வரையில் ரேஞ்ச் தரும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த பேட்டரி பேக் ஐபி67 தர சான்றை பெற்றது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
அதாவது, மழை மற்றும் இயற்கையின் பிற சீற்றங்களால் இது பாதிப்படையாது என்பதே இந்த சான்றுக்கான அர்த்தம் ஆகும். எலெக்ட்ரிக் மோட்டார் விஷயத்திலும் மூன்று வேரியண்டுகளுமே ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. அந்தவகையில், 136 பிஎஸ் மற்றும் 200 என்எம் டார் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டாரே அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், நான்கு விதமான ரைடிங் மோட்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஈகோ பிளஸ் (Eco+), ஈகோ (Eco), நார்மல் (Normal) மற்றும் ஸ்போர்ட் (Sport) ஆகியவையே அவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி விண்ட்ஸர் இவியின் வருகை விரைவில் நாட்டின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலான நெக்ஸானின் விற்பனையில் லேசான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என யூகிக்க முடிகின்றது. இதற்கேற்பவே புக்கிங்கில் அது வரலாற்று சிறப்புமிக்க சாதனையை தற்போது படைத்திருக்கின்றது. எம்ஜி நிறுவனம் இதுமாதிரியான இன்னும் பல புதுமுக வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








