இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா! இதுக்கு மேலயும் பெட்ரோல், டீசல் வண்டியை எல்லாம் வாங்கணுமா?
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV). இது இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள 3வது எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். முன்னதாக எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) என 2 எலெக்ட்ரிக் கார்களை, எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்த வரிசையில் மூன்றாவதாக வரவுள்ள எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார், வரும் செப்டம்பர் 11ம் தேதி (September 11) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் (Unofficial Bookings) ஆகும். இந்தியாவில் உள்ள எம்ஜி நிறுவனத்தின் ஒரு சில டீலர்ஷிப்களில் மட்டும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே கூடுதல் தகவல்களுக்கு அருகே உள்ள எம்ஜி டீலர்ஷிப்பை நீங்கள் அணுகலாம்.
இது சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள வுல்லிங் ஏர் இவி (Wulling Air EV) எலெக்ட்ரிக் காரின், ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். பார்ப்பதற்கு எம்பிவி (MPV) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) கார்களின் கலவையாக இருந்தாலும் கூட, எம்ஜி நிறுவனம் இதனை சியூவி (CUV) என குறிப்பிடுகிறது.

க்ராஸ்ஓவர் யுட்டிலிட்டி வெய்கில் (Crossover Utility Vehicle - CUV) என்பதன் சுருக்கம்தான், சியூவி ஆகும். இன்னும் சொல்லப்போனால் எம்ஜி நிறுவனம் இதனை இந்தியாவின் முதல் இன்டலிஜென்ட் சியூவி (India's First Intelligent CUV) என அழைக்கிறது. அதற்கு ஏற்ப பல்வேறு அதிநவீன வசதிகளை (Features) இந்த கார் கொண்டுள்ளது.
இதில், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் கூடிய 15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மிகவும் முக்கியமானது ஆகும். இதுதவிர 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் விமானங்களில் இருப்பதை போன்று சாய்வு வசதியுடன் கூடிய பின் பக்க இருக்கைகள் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும், எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தைகளில் எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன.
அவை 37.9 kWh மற்றும் 50.6 kWh ஆகியவை ஆகும். இதில், முதலாவது பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 360 கிலோ மீட்டர்கள் எனவும், 2வது பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 460 கிலோ மீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பேட்டரி ஆப்ஷன் இந்தியாவில் வழங்கப்படலாம். அல்லது இரண்டுமே வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 15 லட்ச ரூபாய் என்ற அளவிலும், டாப் வேரியண்ட்டின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவிலும் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி (Mahindra XUV400 EV) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும், எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார் கடுமையான போட்டியை வழங்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








