இந்தியாவே காத்து கிடந்த எலெக்ட்ரிக் கார் களத்தில் இறங்கியது! இந்த 3 தேதியை காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும். இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இன்று (செப்டம்பர் 11) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த எலெக்ட்ரிக் கார் குறித்து 3 முக்கியமான தேதிகளை நீங்கள் நினைவில் வைத்து கொள்வது அவசியம். அவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் டெஸ்ட் டிரைவ் பணிகள் வரும் செப்டம்பர் 25ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. அதற்கு முன்னதாக வரும் நாட்களில் விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார் எம்ஜி நிறுவனத்தின் ஷோரூம்களுக்கு வருகை தரவுள்ளது. இதை தொடர்ந்து எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் அக்டோபர் 3ம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.

MG Windsor EV Launched

இதற்கு அடுத்தபடியாக முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரை டெலிவரி செய்யும் பணிகள் வரும் அக்டோபர் 12ம் தேதியில் இருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் சில வாரங்களில் எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரை நாம் இந்திய சாலைகளில் பார்க்கலாம்.

இது இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் களமிறக்கியுள்ள 3வது எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

MG Windsor EV

இந்த வரிசையில் மூன்றாவதாக விற்பனைக்கு வந்துள்ள எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரில், 38 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range), அதாவது இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 331 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 134 பிஹெச்பி மற்றும் 200 என்எம் டார்க் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரில், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை.

இதில், 15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா, சாய்த்து கொள்ள கூடிய வகையிலான பின் பக்க இருக்கைகள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர, 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் முழு எல்இடி லைட்கள் போன்ற அம்சங்களும், எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. எம்ஜி நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரும் அதிநவீன வசதிகள் நிரம்பிய ஒன்றாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, புதிதாக ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்கலாம் என திட்டமிட்டு கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, புதுவரவான எம்ஜி விண்ட்சர் இவி நல்ல ஆப்ஷனாக இருக்கலாம். எம்ஜி நிறுவனத்தின் மற்ற 2 எலெக்ட்ரிக் கார்களை போலவே, விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரும் நல்ல வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 11, 2024, 19:15 [IST]
English summary
Mg windsor ev launched in india 3 important dates to remember
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+