ரூ.9.99லட்சம் மட்டும்தானா இந்த காரோட விலை.. விமானத்தைபோல முன் பக்கம் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

எம்ஜி (MG), அதன் மூன்றாவது இ-கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் எலெக்ட்ரிக் காரையே அது விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. இது ஓர் சியூவி (CUV) ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் சியூவி ரக கார் மாடல் இதுவே ஆகும். எனவே, இந்த காருக்கு இந்தியாவில் போட்டியே இல்லை என கூறலாம். இந்தியாவில் கோமெட் இவி (Comet EV) மற்றும் இசட்எஸ் இவி (ZS EV) ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே எம்ஜி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்தது.

இவற்றின் வரிசையிலேயே தற்போது புதுமுக கார் மாடலான விண்ட்ஸர் இவி-யை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காரை முற்றிலும் தனித்துவமான தோற்றத்தில் எம்ஜி தயார் செய்திருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு, அக்காரின் முகப்பு பக்கமே சான்றாக இருக்கின்றது. விமானத்தின் முன் பக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையிலேயே விண்ட்ஸர் இவி-யின் முன் பக்கமும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

MG windsor ev launched in india

சிறந்த ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பை இந்த கார் கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்றாகவும் இந்த முன்பக்கம் உள்ளது. தொடர்ந்து, நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் மற்றும் கிராஸ்ஓவர் ரக உடல் அமைப்பையும் இந்த கார் கொண்டிருக்கும். இத்தகைய தனித்துவமான தோற்றம் கொண்ட இந்த காருக்கு ரூ. 9.99 லட்சம் மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது ஆரம்ப நிலை தேர்வின் விலை மட்டுமே ஆகும். இந்த காரின் விலை விபரங்களை இன்னும் முழுமையாக எம்ஜி வெளியிடவில்லை. விரைவில் அதுபற்றிய விபரங்களையும் நிறுவனம் அறிவிக்கும் என கூறப்படுகின்றது. தொடர்ந்து இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டியை முதல் வாடிக்கையாளருக்கு வழங்க இருப்பதாக அது அறிவித்துள்ளது.

இத்துடன், 3-60 நிச்சயம் பை-பைக் திட்டத்தையும், ஓராண்டுக்கு பொதுசார்ஜிங் மையத்தில் இலவசமாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதி ஆகியவற்றையும் இந்த காருக்கு வழங்க இருப்பதாக எம்ஜி தெரிவித்து இருக்கின்றது. எனவே வரும் நாட்களில் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக விண்ட்ஸர் இவி மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறப்பம்சங்களையும் இந்த காரில் மிக தாராளமாக வாரி வழங்கி இருக்கின்றது எம்ஜி நிறுவனம். அந்தவகையில், விமானத்தில் பயணிக்கும் உணர்வை வழங்கக் கூடிய இருக்கைகளை இந்த காரில் அது வழங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ரெக்லைனர் வகை இருக்கையே இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதை 135 டிகிரி வரை சாய்த்துக் கொள்ள முடியுமாம்.

எம்ஜி விண்ட்ஸர் இவி ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது. எக்ஸைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் ஆகியவையே அவை ஆகும். சிறப்பு வசதிகளாக இந்த காரில் டோருடன் டோராக காணப்படக் கூடிய ஃப்ளஷ் வகை கைப்பிடிகள், அழகான 18 அங்குல அலாய் வீல்கள், எல்இடி லைட்டுகள், பெரிய பின்புற ஜன்னல்கள், கருப்பு மற்றும் காப்பர் நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட கேபினையே இந்த கார் கொண்டிருக்கின்றது.

இவை பார்வையாளர்களை முதல் பார்வையிலேயே கவரும் வகையில் இருக்கின்றன. இதுதவிர, 15.6அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.8அங்குல டிஜிட்டல் டிரைவர் திரை, ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி, ஆட்டோமேடிக் ஏசி, பின்புறத்திற்கான ஏசி வென்ட், காற்றை வடிகட்டும் கருவி, 9ஸ்பீக்கர்கள் கொண்ட இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜிங், பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும்.

தொடர்ந்து பாதுகாப்பான பயணத்திற்காக இந்த காரில் ஆறு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் அடாஸ் (ADAS) ஆகியவை வழங்கப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை விண்ட்ஸர் இவியில் 136 பிஎஸ் மற்றும் 200 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின்சார மோட்டரே விண்ட்ஸர் இவியில் வழங்கப்பட உள்ளது.

இதேபோல், சிறந்த மின்சார திறனுக்காக 38 kWh பேட்டரி பேக்கே விண்ட்ஸர் இவியில் வழங்கப்பட உள்ளது. இது ஓர் முழு சார்ஜில் 331 கிமீ வரை ரேஞ்ச் தரும். இந்த பேட்டரி பேக்கை DC ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 40 நிமிடங்களிலேயே சார்ஜ் செய்துவிட முடியும். இந்த காரில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பதை போல அதிக பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும் முக்கியத்தும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

அந்தவகையில் 604 லிட்டர் அளவில் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான பூட் ஸ்பேஸே இதில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காருக்கு 'Battery-as-a-Service' எனும் திட்டத்தை வழங்கவும் எம்ஜி திட்டமிட்டுள்ளது. இதன்கீழ் காரை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு கிமீட்டருக்கு ரூ. 3.5 கட்டணம் செலுத்தினாலே போதும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனத்தின் இந்தியாவிற்கான மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவாகும். இதற்கு ரூ. 9.99 லட்சம் மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது டாடா மோட்டார்ஸ்க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கலாம். இவர்களே இந்தியாவின் மின்சார வாகன உலகின் அறிவிக்கப்படாத தலைவனாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே யாரும் எதிர்பார்த்திராத குறைவான விலையில் விண்ட்ஸர் இவி களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இது மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களை வரும் நாட்களில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 11, 2024, 14:39 [IST]
English summary
Mg windsor ev launched in india with unique battery as a service program here is price details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+