இப்படி ஒரு காரானு எல்லாரும் வாயை பிளக்க போறாங்க!.. இவ்ளோ மோசமான சாலையிலகூட இந்த காரு இவ்ளோ அசால்டா போகுமா!!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி (MG) சீக்கிரமே இந்தியாவில் விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல் ஆகும். ஏற்கனவே இந்தியாவில் எம்ஜி நிறுவனம் இசட்எஸ் இவி (ZS EV) மற்றும் கோமெட் இவி (Comet Ev) எனும் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே விரைவில் விண்ட்ஸர் இவி இணைக்கப்பட உள்ளது. இது ஓர் சியூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
இப்போதைய நிலவரப்படி இந்த பிரிவில் ஒரு மாடல்கூட விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த குறையையே விண்ட்ஸர் இவி போக்க இருக்கின்றது. இதன் வாயிலாக இந்த கார் சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் என்பது தெரிகின்றது. இத்தகைய காரின் பக்கமே மக்களை ஈர்க்கும் பணியில் தற்போது எம்ஜி ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையில், நிறுவனம் விண்ட்ஸர் இவி-யின் டீசர் படங்களை தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. இப்போதும் ஓர் வீடியோவை விண்ட்ஸர் இவி குறித்து எம்ஜி வெளியிட்டு இருக்கின்றது. அந்த வீடியோவில் விண்ட்ஸர் இவியின் திறனை வெளிக்காட்டக் கூடிய காட்சிகளே இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, மிகவும் ஏற்றமான மலைப் பாதையை விண்ட்ஸர் இவி அசால்டாக சமாளிக்கும் காட்சிகளே இடம் பெற்றிருக்கின்றன.
விண்ட்ஸர் இவி இமயமலையில் வைத்து சமீபத்தில் சோதனைச் செய்யப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக இந்த காரின் அறிமுகம் மிக நெருக்கத்தில் இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இந்த முறையும் விண்ட்ஸர் இவி முழுமையாக மறைக்கப்பட்ட நிலையிலேயே சோதனையோட்டம் செய்யப்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக, காரை இயக்கவே முடியாத என நினைக்கக் கூடிய இடங்களில் எல்லாம் வைத்து இந்த கார் ஓட்டப்பட்டு இருக்கின்றது, அங்கும்கூட இந்த கார் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கின்றது. எனவே எம்ஜி-யின் விண்ட்ஸர் இவி மலைப் பகுதியில் வைத்து பயன்படுத்துவதற்கும் உகந்த வாகனமாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,688 அடி உயரமுள்ள சாங் லா பாஸ் பகுதியில் வைத்தே வின்ட்சர் இவி கடுமையான சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது கரடு-முரடான பாதையைக் கொண்ட நிலபரப்பு மட்டுமல்ல மிகக் கடுமையான குளிர் காலநிலையைக் கொண்ட நிலபரப்பும்கூட என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மாதிரியான சூழலிலும் இந்த கார் மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த கார் இந்தியாவின் மிகுந்த குளிரான பிரதேசங்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என்பது தெரிகின்றது. மிகவும் தனித்துவமான தோற்றம் கொண்ட கார் மாடலே விண்ட்ஸர் ஆகும். இது பார்க்க எஸ்யூவி மற்றும் எம்பிவி ஆகிய இரண்டு கார்களைப் போல இருக்கலாம், ஆனால், இது ஓர் சியூவி ரக கார் மாடல் ஆகும்.
பிரமாண்ட உருவம், அதிகம் லக்கேஜ்களை ஏற்றிச் செல்வதற்கான வசதி என ஏகப்பட்ட அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கும். இதுமட்டுமில்லைங்க, எம்ஜி காமெட் இவி எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருப்பதைப் போன்ற அதி நவீன வசதிகள் நிறைந்த ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இடம் பெற இருக்கின்றன.
இதுதவிர, இந்த காரில் 50.6 kWh மற்றும் 37.9 kWh பேட்டரி பேக் என இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவை ஓர் முழு சார்ஜில் 360 கிமீ முதல் 460 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும்.
இத்தகைய திறன் கொண்ட விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காரையே எம்ஜி நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க அடுத்தடுத்து என இன்னும் சில கார் மாடல்களை இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், 3 அல்லது 6 மாதங்களுக்கு ஓர் புதிய காரை விற்பனைக்குக் கொண்டு வர எம்ஜி திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தைக்காக எம்ஜி நிறுவனம் தற்போது ஜேஎஸ்டபிள்யூ உடன் கூட்டணி வைத்திருக்கின்றது. இந்த கூட்டணியை அடுத்தே மாபெரும் பிளானில் உள்ளது. அதாவது, மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதில் முதல் கார் மாடலாக விண்ட்ஸர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








